தொகுதிகள்: கிணத்துக்கடவு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
297116
ஆண்
:
147416
பெண்
:
149681
திருநங்கை
:
19

ஒருபுறம் கிராமங்களாகவும், மற்றொருபுறம் நகரங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது கிணத்துக்கடவு. கடந்த 1967-ம் ஆண்டு கோவில்பாளையம் சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியாக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கிணத்துக்கடவு, மதுக்கரை தனித்தாலூகாவாக மாற்றப்பட்டு, ரூ.4 கோடி செலவில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கிணத்துக்கடவில் குளிர் பதனகிடங்கு கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. சொக்கனூர்- கண்ணம்மநாயக்கணூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம்- மதுக்கரை ரெயில்வே மேம்பாலம், போத்தனூர்-செட்டிப்பாளையம் இடையே ரெயில்வே மேம்பாலம், குறிச்சி-பிள்ளையார்புரம் பகுதியில் மலையை சுற்றி தார் சாலைவசதி செய்யப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.-எம்.எல்.ஏ. செ.தாமோதரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
செல்வம் (சுந்தராபுரம்)
கிணத்துக்கடவில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரெயில்பாதை பணிகள் முடிவடையாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சலிங்கம் (கிணத்துக்கடவு)
Set up a government college at Kinathukadavu and complete Pothanur - Pollachi broad gauge work at a fast pace.
Panjalingam (Kinathukadavu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினையை தீர்க்க வேண்டும், புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே புதிய தாலுகா அலுவலகத்தை திறக்க வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.