தொகுதிகள்: கிருஷ்ணராயபுரம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கரூர்
வாக்காளர்கள்
:
203019
ஆண்
:
99623
பெண்
:
103355
திருநங்கை
:
41

கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் கிருஷ்ணராயபுரம், கடவூர் என இரண்டு தாலுகாக்கள் உள்ளது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளையும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளையும்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.3.25 கோடியில் பள்ளபாளையம் காவிரி கூட்டுக் குடிநீர்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கருப்பம்பாளையம் ஆண்டாங்கோவிலில் ரூ.15.5 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் வெள்ளியணை, ஜெகதாபி, சேங்கல், மாயனூர், தரகம்பட்டி, கடவூரில் புதிய பள்ளி கட்டிடங்கள், ரூ.2 கோடி மதிப்பீட்டில் தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மணவாசி ஊராட்சியில் 22 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள்,திருக்காம்புலியூர் ஊராட்சியில் 23 நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. கடவூர் தாலுகா பொன்னனியாறு அணை ரூ.2.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ரூ.7 கோடி மதிப்பீட்டில் 33 சிறு, குறு பாலங்கள், நபார்டு, நெடுஞ்சாலைதுறை சிறப்பு நிதி மூலம் ரூ.97 கோடி மதிப்பீட்டில், புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. - எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

More doctors should be appointed in the government hospital.
Velu (Jayamkondam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மணவாசி அருகே அரசு தொழில்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. வாழை, வெற்றிலை இப்பகுதியில் அதிக விளைவிக்கப்பட்டு வருகிறது. அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்த நெல் கொள்முதல் செய்வது போல் வாழை மற்றும் வெற்றிலையை கொள்முதல் செய்ய வேண்டும். 40-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ளது. இந்த ஏரி, குளங்கள், பிராதன வாய்க்கால்கள், கிளை வாய்கால்கள் ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று இந்த தொகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த தொகுதியில் விவசாயமே பிராதன தொழிலாக இருந்தபோதிலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளோ? மற்ற தொழிற்சாலைகளோ? இல்லாதது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.