தொகுதிகள்: லால்குடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
203840
ஆண்
:
99398
பெண்
:
104428
திருநங்கை
:
14

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் லால்குடியும் ஒன்று. 2 லட்சத்து 70 ஆயிரத்து 445 மக்கள் தொகை கொண்ட இத்தொகுதி பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாகக் கொண்டதாகும். நெல், கரும்பு வாழை,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெருவளப்பூர், வாளாடி, கல்லகம், மால்வாய் ஆகிய ஊர்களில் உள்ள நான்கு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாகவும், மூன்று நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளியாகவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 8 மேல்நிலைப்பள்ளிகள், நான்கு உயர்நிலைப்பள்ளிகளுக்கு நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் கட்டிதரப்பட்டுள்ளது. லால்குடியில் உழவர் சந்தை அமைத்தது. கீழ்மாரிமங்கலத்தில் துணைமின் நிலையம் அமைக்க இடம் பெற்று தரப்பட்டுள்ளது. லால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரிக்கு புதிய இடத்தில் புதிய கட்டிடம் கட்டியது, லால்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டது. - சட்டமன்ற உறுப்பினர் ஏ. சவுந்தரபாண்டியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

If a floor level bridge with a barricade is built in between Lalgudi and Kilikoodu, traffic will reduce and more than twenty villages will get irrigation facility.
P.Visvanathan (Lalgudi)
நகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட வேண்டும். விவசாயம் செழிக்க வழி வகுக்க வேண்டும். தொழில் பேட்டை தொடங்க வேண்டும். திருச்சி-அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலைகள் நான்கு வழி சாலைகள் ஆக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
VIGNESHWARAN (Lalgudi)
நகராட்சியாக தரம் உயர்த்தப்படவேண்டும்.
பால்ராஜ் (லால்குடி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

லால்குடியின் மையப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவடைந்தும் அணுகுசாலை மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகளில் பல்வேறு இடையூறுகள் நிலவிவருகிறது. விவசாயத்தை மட்டுமே கொண்டுள்ள இத்தொகுதியில் விவசாயக்கல்லூரி இருந்தும் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனம் எதுவும் அமைக்கப்படாதது இத்தொகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அரசு சார்ந்த நிறுவனங்கள் இல்லாதது ஒரு குறையாகவே கருதப்படுகிறது.