தொகுதிகள்: மதுராந்தகம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
218792
ஆண்
:
107113
பெண்
:
111656
திருநங்கை
:
23

மதுராந்தகம் (தனி) தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது அச்சரப்பாக்கம் தொகுதி நீக்கப்பட்டு அந்த தொகுதியில் இருந்த அச்சரப்பாக்கம் பேரூராட்சி, அச்சரப்பாக்கம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மதுராந்தகத்தில் இருந்த பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை அகற்றி அதற்கு பதிலாக ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கோர்ட்டு மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, ரூ.3 கோடியே 16 லட்சம் செலவில் கத்ரிச்சேரி பாலம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1 1/2 கோடி செலவில் தண்டரைபேட்டை பாலம், எண்டத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம், ஜமீன் எண்டத்தூரில் 30 படுக்கைகளுடன் விரிவுபடுத்தப்பட்ட சுகாதார நிலையம் என்று பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. கணிதா சம்பத்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சாலை வசதி சரியாக வேண்டும்
KARTHIKEYAN (மதுராந்தகம் தொகுதியில் உள்ள லத்தூர்)
புறவழி பேருந்து நிலையம் தேவை கூடுதல் ரயில் வசதி தேவை
ராஜாமணி (மதுராந்தகம்)
புறவழி பேருந்து நிலையம் தேவை
ராமமூர்த்தி (மதுராந்தகம்)
கூடுதல் ரயில் வசதி தேவை
ராமமூர்த்தி (மதுராந்தகம்)
சலை வசதி சரியாக வேண்டும்
பெருமாள் (அச்சரப்பாக்கம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயிகள் அதிக அளவில் வசித்து வரும் மதுராந்தகம் தொகுதியில் விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும் வகையில் தொகுதியில் உள்ள மதுராந்தகம் ஏரி, முதுகரை ஏரி, வில்வராயநல்லூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வார வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு மதுராந்தகம் தொகுதியில் உள்ள மாமண்டூர், படாளம், பூதூர், ஈசூர் போன்ற ஊர்களின் வழியாக செல்கிறது. இதில் தடுப்பணை அமைக்க வேண்டும் எனவும், நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுராந்தகம் தொகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.