தொகுதிகள்: மதுரவாயல்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
402131
ஆண்
:
204127
பெண்
:
197877
திருநங்கை
:
127

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டிருந்த மதுரவாயல், கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது பிரிக்கப்பட்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. மதுரவாயல் தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மதுரவாயல் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான போரூர் மேம்பாலம் கட்ட கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த பணி பாதியில் நின்றது. மேம்பால பணியை நிறைவேற்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். சட்டமன்றத்திலும் பலமுறை விவாதித்தேன். தற்போது ரூ.54 கோடியில் மீண்டும் போரூர் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மண்டல அலுவலகம் அருகே தாசில்தார் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள், முகப்பேர் மேற்கு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.50 லட்சத்தில் பஸ் நிலையம், ரேஷன் கடைகள் இல்லாத பல்வேறு இடங்களில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. - எம்.எல்.ஏ. பீம்ராவ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

முக்கிய எதிர்பார்ப்புகள்

கடந்த பல வருடங்களாக மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போரூர் மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பணிகள் தொடங்கி உள்ளன. அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.