தொகுதிகள்: மயிலம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
211290
ஆண்
:
105636
பெண்
:
105640
திருநங்கை
:
14

தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவான தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் தொகுதியும் ஒன்று. மயிலம் தொகுதியில் மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 45...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வெள்ளிமேடு பேட்டை, செண்டூர், முப்புளி, நெடிமோழியனூர் ஆகிய 4 கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில் அகூர், பெரியதச்சூர், கொள்ளார், தென்ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளது. கூட்டேரிப்பட்டில் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், நாட்டார்மங்கலத்தில் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. ரூ.8 கோடி செலவில் மேல்சேவூர்-கொங்கரப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டியுள்ளோம். கொத்தமங்கலம், ஆசூர் ஆகிய கிராமங்களில் உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டியுள்ளோம். வீடூர், புலியனூரில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.- கே.பி.நாகராஜன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது தினமும் விபத்துகள் ஏற்படுவதால் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும். மேலும் இங்கு புறக்காவல் நிலையமும் அமைக்க வேண்டும்.
தேசபந்து (கூட்டேரிப்பட்டு)
ரெட்டணை அரசு மருத்துவ மனையை நவீனப்படுத்தி கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.
ராஜேந்திரன் (ரெட்டணை)
The newly constructed barricade across Thondi river at Rettanai is not up to the mark and therefore water leaks.
Rajendran (Rettanai)
போன தேர்தலில் வென்ற அ.தி.மு.க. M L A நாகராஜ் இதுவரெயில் எங்கள் கிராமத்திற்கு வரவில்லை எங்கள் எதிர் பார்ப்பு PMK மாற்றம் தேவை
சிரஞ்சீவி கி (AMMAKULAM கிராமம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த பகுதியில் விளையும் விளைபொருட்களை விற்பனை செய்ய வெகுதொலைவில் உள்ள திண்டிவனம், செஞ்சி மற்றும் திருக்கோவிலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மயிலம் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டேரிப்பட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 4 3/4 ஆண்டுகளில் மயிலம் தொகுதியில் சொல்லும்படியான அளவிற்கு எந்த வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.