தொகுதிகள்: மேலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
232154
ஆண்
:
114871
பெண்
:
117283
திருநங்கை
:
0

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி 1951 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. முதலில் இரட்டைத் தொகுதியாக இருந்தது. 1967, 1971-ம் ஆண்டுகளில் மேலூர் தெற்கு, வடக்கு என 2 ஆக பிரிக்கப்பட்டது. இதில் தெற்கு தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மேலூர் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரூ.784 கோடியில் நிறைவேற்றி உள்ளோம். அனைத்து கிராமங்களுக்கும் காவிரி நீர் வழங்கப்படுகிறது. கிராம பள்ளிகள் அனைத்திலும் சுற்றுச்சுவர் எழுப்பி கூடுதல் கட்டிடங்கள், கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. 15 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்), எம்.பில்., பி.எச்டி., எம்.காம்., எம்.எஸ்சி., என 15 புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. திருவாதவூர், மேலவளவு, கருங்காலக்குடி, கம்பூர் ஆகிய ஊர்களில் அரசு பள்ளிகளில் நபார்டு திட்டத்தின்கீழ் தலா ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், சூரப்பட்டி, பாப்பாகுடிபட்டி ஆகிய ஊர் பள்ளிகளில் தலா ரூ.1 கோடியே 40 லட்சத்தில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. கொட்டாம்பட்டி பாலாற்றில் ரூ.5 கோடியில் தடுப்பணை, சின்னகொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி, பள்ளபட்டி ஆகிய ஊர் மக்களின் வசதிக்காக பாலாற்றில் 2 பாலங்கள், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலவளவு, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் 3 துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கருங்காலக்குடி, மேலூரில் 24 மணி நேரமும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, வருவாய் கோட்ட அலுவலகம் கொண்டு வரப்பட்டு உள்ளன. நகராட்சி அலுவலகம் ரூ.3 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.75 லட்சத்தில் நூலகம், ரூ.1 கோடியில் போலீஸ்நிலையம், ரூ.55 லட்சத்தில் கிளை கருவூல அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. - எம்.எல்.ஏ. சாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Repair roads.
Ayyanar (Melur)
bjp
senthivel (melur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்க வேண்டும். அணையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும்.