தொகுதிகள்: முசிறி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
212655
ஆண்
:
104402
பெண்
:
108242
திருநங்கை
:
11

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து தேர்தலை சந்தித்து வரும் தொகுதிகளில் ஒன்று முசிறி. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக முசிறியும் உள்ளது.கடந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.10 கோடிக்கு பல்வேறு பணிகள் நடந்து உள்ளன. முசிறியில் ரூ.4 கோடியே 70 லட்சத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், முசிறி தொகுதியில் 5 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. பைத்தம்பாறை அரசு பள்ளியில் ரூ.1 கோடியே 60 லட்சத்திலும், காட்டுப்புத்தூர் பள்ளியில் ரூ.1 கோடியே 90 லட்சத்திலும், திருநாராயணபுரத்தில் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்திலும், கார்குடி பள்ளியில் ரூ.1 கோடியே 60 லட்சத்திலும் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. முசிறி பேரூராட்சி பகுதியில் மட்டும் ரூ.11 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.50 லட்சத்தில் சந்தை கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. காடுவெட்டி சீலை பிள்ளையார் புத்தூர் சாலை ரூ.1 கோடியே 40 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தொகுதி முழுவதும் ரூ.37 கோடியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய சாலைகள், தொட்டியம், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர் பேரூராட்சிகளில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலை, தண்ணீர், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம். காட்டுப்புத்தூர் பேரூராட்சி கட்டிடங்கள் ரூ.2 1/2 கோடியில், தொட்டியத்தில் வேளாண்மை கிட்டங்கி ரூ.1 1/2 கோடியில், காடுவெட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் ரூ.75 லட்சத்தில், தொட்டியம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தில் புதிய கால்நடை மருந்தகம் அமைக்கப்பட்டது. பாலசமுத்திரம், முசிறி, செவந்திலிங்கபரம், புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. கால்நடை மருந்தக கட்டிடங்கள் எம் களத்தூர், எம் புத்தூர், சேர்குடி, தும்பலம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டது. நாகைய நல்லூர், ஊரக்கரை, தண்டலைப்புத்தூர் ஏரிகள் ரூ.7 1/2 கோடியில் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்க மதகுகள் கட்டப்பட்டு உள்ளது. காடுவெட்டியில் ரூ.75 லட்சத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. முசிறியில் இருந்து ராமேசுவரம், கரூரில் இருந்து மாயனூர், சீலை பிள்ளையார் புத்தூர் ஆகிய இடங்களுக்கு புதிய பஸ்கள் விடப்பட்டு உள்ளன. முசிறி பேரூராட்சியில் ரூ.21 கோடியில் குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட்டு உள்ளது. - சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். சிவபதி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (5 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up industries to develop the livelihood of youngsters.
P.Deepika (Musiri)
மணல் எடுப்பதை தடுக்க வேண்டாம் குறைக்கலாமே, முசிறி நகர் உள்ளே லாரி போக்குவரத்தின் நேரம் வரையறுக்க பட வேண்டும் வாய்கால்களை தூர்வார வேண்டும்,புதிய பேருந்துநிலையம் முதல் கைகாட்டி வரை சாலை அகல படுத்தி இடையில் மின் விளக்கு கம்பங்கள் கொண்ட தடுப்பு சுவர் அமைக்க
சசி G (முசிறி)
இலவசம் வேண்டாம் /வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்க செய்ய வேண்டும்
G SABARINATHAN (THOTTIYAM)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகளிருக்கான அரசு தொழிற்நுட்ப கல்லூரி. விவசாயிகளுக்காக காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைக்க வேண்டும்.