தொகுதிகள்: நாகப்பட்டினம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாகப்பட்டினம்
வாக்காளர்கள்
:
183048
ஆண்
:
89661
பெண்
:
93386
திருநங்கை
:
1

நாகை தொகுதி 1952-ல் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது இது இரட்டைத்தொகுதியாக இருந்தது. அதன்பின்னர் 1957 தேர்தலில் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், நாகை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் 44 குடிநீர் சுத்திகரிப்பு அலகுகள், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.2 கோடியே 83 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம், நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நாகையில் ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் மீன்வள பல்கலைக்கழகமும், ரூ.34 கோடியே 8 லட்சம் மதிப்பில் மீன்வள தொழில்நுட்ப நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டைவாசல்படியில் உள்ள தேவநதி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நாகையில் மாற்று கருத்து சமரச தீர்வு மைய கட்டிடம், மாவட்ட வேலைவாய்ப்பு மைய கட்டிடம், மாவட்ட தொழில்மைய கட்டிடம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மையம், வேளாண்மை விதை சான்று அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை ஆகிய அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடங்கள், ஊனமுற்றோருக்கான கழிவறை கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. நாகை தொகுதியில் சேதமடைந்து கிடந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நாகை நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவு நீர் குழாய் பதித்தல், கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 30 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. ஜெயபால்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 6 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

ம. நே. ஜ. கட்சி 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Renovate the damaged compound wall of Thamaraikulam and rectify the bad roads.
Chandrakala (Kadambadi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நாகை மீன்வர்களின் வாழ்வாதாரமான துறைமுகம் மேம்படுத்தவில்லை. தமிழக அரசு நாகை மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அந்த திட்டம் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து மிதவை கப்பல் மூலம் சரக்குகள் நாகைக்கு கொண்டுவரப்படும். இதனால் நாகையில் பல்வேறு தொழிலாளர்கள் பயனடைந்தனர். ஆனால் அதற்கு பிறகு வந்தவர்கள் அதனை பின்பற்றாமல் போய்விட்டார்கள்.