தொகுதிகள்: நாமக்கல்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
242563
ஆண்
:
118136
பெண்
:
124388
திருநங்கை
:
39

நாமக்கல் சட்டமன்ற தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு இரட்டை வாக்குரிமை கொண்ட தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.வி.ராமசாமி, காங்கிரஸ்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1.24 கோடியில் உள் விளையாட்டு அரங்கம், ரூ.1.35 கோடியில் நீதிபதிகளுக்கு புதிய குடியிருப்புகள், ரூ.1 1/2 கோடியில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ.1 கோடியில் நீச்சல் குளம் என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவு செய்து புதர்மண்டி கிடந்த ஜெட்டிக்குளம் மற்றும் திருப்பாக்குளம் ஆகிய இருகுளங்களையும் சீரமைத்து, அங்கு பொழுது போக்கு பூங்கா அமைத்து கொடுத்து உள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைத்தில் சமுதாய வானொலி நிலையம் அமைக்க ரூ.20 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்து உள்ளேன். நாமக்கல் நகரில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணியர் மாளிகை அருகில் சாலை விரிவாக்கம், புதியதாக பூங்கா சாலை உருவாக்கம், பெய்யோரிக்கரை சாலை விரிவாக்கம், மேட்டுத் தெருவில் கோவில் சுற்றுச்சுவர்கள் அகற்றம் போன்ற பணிகளை செய்து உள்ளோம். மேலும் சுற்றுச்வட்டசாலை ரூ.84 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக நில ஆர்ஜிதம் பணிக்கு ரூ.10.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் புதிய பஸ்நிலையம் அமைக்கவும் ரூ.35 கோடி தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் நகரில் ரூ.1 கோடியில் பொதுமக்கள் பங்களிப்போடு பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், குடிநீர் சுத்திகரிப்பான் வாங்கி கொடுத்து உள்ளேன். - எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

அரிசி மற்றும் பருப்பு வகைகள், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை பெரும்பாலான ரேஷன் கடைகளில் முறையாக வழங்கப்படுவது இல்லை.
ராஜம் (பொரசபாளையம்)
நாமக்கல் நகரில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரிங்ரோடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. தற்போது ரிங்ரோடு பணி தொடங்கப்பட்டு இருந்தாலும், எப்போது முடியும் என்பது தெரியவில்லை.
சுந்தரம் (கலங்காணி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரிங்ரோடு. புதிய பஸ்நிலையம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி