தொகுதிகள்: நாங்குநேரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
241450
ஆண்
:
120033
பெண்
:
121415
திருநங்கை
:
2

நாங்குநேரி தொகுதி விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் சற்று பெரிய தொகுதியாக நாங்குநேரி தொகுதி விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு புலிகள்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் ரூ.11 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கப்பட்டு இருக்கிறது. ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.52 லட்சத்தில் மாணவர் விடுதி கட்டப்பட்டு உள்ளது. ஏர்வாடி அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய பாலம், நம்பியாற்றின் குறுக்கே ரூ.90 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளன. மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் நல விடுதி கட்டப்பட்டு இருக்கிறது. மூலைக்கரைப்பட்டியில் துணை மின்நிலையம் ரூ.24 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளன. - ஏ.நாராயணன் எம்.எல்.ஏ

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

சமத்துவ மக்கள் கட்சி 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

அல்லோகாடே கொடிமுடியர் டம் வாட்டர் டு நாங்குநேரி தலுக் ப்ரோடேச்ட் தி ஆக்ரிகுல்டுரே பாரம் பிரோம் வில்ட்லிபே இன் தி வெஸ்டேர்ன் காட்ஸ் இம்ப்ரோவே தி தலுக் காபிடல் இன் நியூ லுக் அண்ட் பாசிளிதீஸ் நீட் கோவேர்ந்மேன்ட் காலேஜ்
கிருஷ்ணா Kumar (nanguneri)
Unemployment is a huge problem and we expect the Government to look into it.
S. V. Krishnan (Nanguneri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நாங்குநேரி தொகுதி மட்டுமின்றி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.323 கோடியில் இந்த திட்டம் உருவானது. ஆனால், அதிக அளவில் அங்கு நிறுவனங்கள் தொடங்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இதுவரை 8 கம்பெனிகள் மட்டுமே அங்கு உள்ளன. எனவே இந்த திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து, அதிக நிறுவனங்களை அங்கு தொழில் தொடங்கச் செய்து வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். பச்சையாறு அணையில் இருந்து நாங்குநேரிக்கு கீழே உள்ள 46 குளங்களை இணைத்து, நீர்ப்பாசனம் கிடைக்கச் செய்யும் தனிக்கால்வாய் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.