தொகுதிகள்: நிலக்கோட்டை (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
218075
ஆண்
:
108248
பெண்
:
109822
திருநங்கை
:
5

பூக்கள் உற்பத்தியில் ‘தமிழகத்தின் ஆலந்து’ என்று திண்டுக்கல் அழைக்கப்படுவதற்கு நிலக்கோட்டை தான் காரணம் ஆகும். அப்படிப்பட்ட புகழைத் தாங்கி நிற்கும் நிலக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதியில்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சமுதாயக்கூடம், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உள்ள ஓடைகளில் தடுப்பணைகள் கட்டுப்பட்டுள்ளன. நூத்துலாபுரத்தில் வசூல் மையத்துடன் கூடிய துணைமின்நிலையம் அமைக்கப்பட்டது. உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நிலக்கோட்டை அரசு மகளிர் கலைகல்லூரியில் முதுகலை பட்டபடிப்பில் 6 பாட பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. நூத்துலாபுரத்தில் வசூல் மையத்துடன் கூடிய துணைமின்நிலையம் அமைக்கப்பட்டது. - முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

புதிய தமிழகம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகளை அந்தந்த பள்ளி, கல்லூரிகளிலேயே தேர்வு செய்ய வேண்டும்.
கார்த்திகா (நிலக்கோட்டை)
நிலக்கோட்டையில் உழவர் சந்தையை ஏற்படுத்த வேண்டும். வர்த்தகம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் கொடைரோடு ரெயில்நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
மாரியப்பன் (நிலக்கோட்டை)
Upgrading Kodai Road railway station and setting up 'Uzhavar Santhai' at Nilakottai will be nice.
Mariappan (Nilakottai)
நிலக்கோட்டை நகரை மேம்படுத்துவதற்கென முற்போக்கான திட்டங்கள் தேவை. நிலக்கோட்டை கண்மாய் தூர்வாரப்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் உயர்தரமாக்கப்பட வேண்டும். பூக்கள் பதனிடும் கிட்டங்கி வசதி அவசியம் தேவை. பேருந்து வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். திண்டுக்கலில் இருந்து நிலக்கோட்டை வழியாக திருமங்கலம் செல்வதற்கான மேம்பால பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.நிலக்கோட்டை நகரில் கிடப்பில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் தொடர்பான மேல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு,ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தங்கத்துரை ச (நிலக்கோட்டை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பூக்களுக்கு நிரந்தர விலை கிடைப்பதில்லை. பூக்கள், பழங்களை பதப்படுத்தும் வகையில் குளிர்பதனக்கிடங்கு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வத்தலக்குண்டு வழியாக தேனி-சபரிமலை ரெயில் திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.