தொகுதிகள்: பாலக்கோடு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
212791
ஆண்
:
109125
பெண்
:
103656
திருநங்கை
:
10

தர்மபுரி மாவட்டத்தின் வடமேற்குப்பகுதியில் பாலக்கோடு தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளும், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 2 ஊராட்சி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, நபார்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியவற்றின் மூலம் இந்த தொகுதியில் ரூ.35 கோடி மதிப்பில் 10 பாலங்கள், பேரூராட்சிகள், பல்வேறு கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக காரிமங்கலத்தில் புதிய மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. காரிமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரை கால்வாய் அமைத்து கொண்டு வரும் திட்டம், தொகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு வரும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Pipelines of Hogenakkal drinking water scheme should be repaired and steps should be taken to control mosquitoes.
Saroja (Marandalli)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த தொகுதி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. விவசாயம் முக்கிய தொழிலாக உள்ள இந்ததொகுதியில் வறட்சி ஏற்படும்போது வேலைவாய்ப்புகளை வழங்க குறிப்பிடத்தக்க தொழில்வளர்ச்சியோ, தொழிற்சாலைகளோ உருவாக்கப்படவில்லை.