தொகுதிகள்: பழநி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
257099
ஆண்
:
127430
பெண்
:
129641
திருநங்கை
:
28

‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படுகிற கொடைக்கானலையும், முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலையும் தன்னகத்தே கொண்டது பழனி சட்டமன்ற தொகுதி ஆகும். பழனி, கொடைக்கானல்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பழனியில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.75 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளும், ரூ.21 கோடியே 60 லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளும் நடந்துள்ளன. ரூ.7 கோடியில் கோடைக்கால நீர்த்தேக்கமும், ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. சிவகிரிபட்டி ரூ.11 கோடியே 60 லட்சம் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் ரூ.2 3/4 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பழனி, கொடைக்கானலில் கோடைக்காலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.17 கோடி, கொடைக்கானலில் கீழ்குண்டாறு திட்டத்துக்கு ரூ.46 கோடியே 31 லட்சமும், பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.140 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ரூ.5 கோடியே 62 லட்சம் செலவில் கொடைக்கானல் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.223 கோடியே 28 லட்சம் செலவில் 335 கிலோமீட்டர் தூரம் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.ரூ.14 கோடியே 6 லட்சம் மதிப்பில் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.19 கோடியே 89 லட்சம் செலவில் 45 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ.22 கோடி மதிப்பில் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.- கே.எஸ்.என். வேணுகோபாலு எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 3 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கல்லூரியில் வேலைவாய்ப்பு சார்ந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும்.
மாணவி தமிழரசி (கொடைக்கானல்)
பழனியை சுற்றிலும் ஏராளமான கோவில்கள் இருப்பதால் ஆன்மிக சுற்றுலாதலமாக்க வேண்டும். சித்தர்கள் வாழ்ந்த இடமான பழனியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும்.
மணிகண்டன் (பழனி)
பழனியில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜ் (பழனி)
நெய்க்காரப்பட்டியில் பஸ்நிலையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
விஜய சாமுண்டீஸ்வரி (நெய்க்காரப்பட்டி)
Upgrading the basic facilities and safety measures for devotees will be welcomed.
Manikandan (Palani)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கொடைக்கானலில் காய்கறி, பழங்கள் குளிர்பதனக்கூடம் அமைக்க வேண்டும். ஆயக்குடி பகுதியில் கொய்யா, மாம்பழம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால விருப்பமாக உள்ளது. கொடைக்கானல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்ட கீழ்குண்டாறு திட்டம், கொடைக்கானல் ஏரியை தூர்வாரும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். பழனி நகருக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கழிவு நீர் தேங்கியுள்ள பழனி வையாபுரிகுளத்தை தூர்வார வேண்டும். பச்சையாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.