தொகுதிகள்: பல்லாவரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
406766
ஆண்
:
203283
பெண்
:
203464
திருநங்கை
:
19

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூர் தொகுதியில் இடம்பெற்று இருந்த பல்லாவரம் நகராட்சி, மீனம்பாக்கம் பேரூராட்சி, திரிசூலம் ஊராட்சி மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்று...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.161 கோடியில் பல்லாவரம், பம்மல் பகுதிக்கு செம்பரம்பாக்கம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு வேங்கடமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்லாவரம் தொகுதியில், புதிதாக தாசில்தார் அலுவலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பல்லாவரம், பம்மல் பகுதியில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. ப.தன்சிங்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ரேகா (பம்மல்)
பம்மல் பகுதியில் குப்பைகளை அகற்றுவதிலும், அடிப்படை சுகாதார பணிகளை செய்வதிலும் மந்த நிலையே காணப்படுகிறது.
ரேகா (பம்மல்)
Expand Pallavaram - Kundrathur road to prevent traffic congestion.
Rekha (Pammal)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. பம்மல், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் அடையாறு ஆற்றில் கலப்பதால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் பெரும்பாலான நாட்களில் கேன் தண்ணீரை வாங்கி குடிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார் பகுதிகளில் அடையாறு ஆற்றில் தடுப்பணை இல்லாததால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டும் தற்போது ஆற்றில் கழிவு நீர் மட்டுமே உள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களும் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர்.