தொகுதிகள்: பெரியகுளம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தேனி
வாக்காளர்கள்
:
257403
ஆண்
:
127039
பெண்
:
130286
திருநங்கை
:
78

வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை என மூன்று அணைகள் அமையப் பெற்ற தொகுதியாக பெரியகுளம் (தனி) தொகுதி அமைந்துள்ளது. மா, வெல்லம், வெள்ளைப்பூண்டு விற்பனையிலும் சிறப்பு பெயர் பெற்று...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடி முழுவதும் குடிநீர் திட்டப்பணி, ஆழ்துளை குழாய் அமைத்தல், பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைத்தல் போன்ற மக்கள் பயன்படும் திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. தேனி சமதர்மபுரத்தில் செயல்பட்ட என்.ஆர்.டி. பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து, மீண்டும் மருத்துவமனையை செயல்படுத்த ரூ.11 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. ரூ.1 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் சீரமைக்கப்பட்டது. பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் செல்லும் சாலையை அகலப்படுத்த ரூ.63 லட்சம் செலவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்குவதால் ஏழை குடும்பங்களில் கல்விக்கான செலவு குறைந்து உள்ளது.
யோகேஸ்வரி (தேனி)
அகல ரெயில் பாதையாக மாற்றுவதாக அறிவித்து நிறுத்தப்பட்ட மதுரை- போடி இடையிலான மீட்டர்கேஜ் ரெயில் பாதையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரேசன் (தேனி)
விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்
ராஜா (பெரியகுளம்)
The train from Madurai to Bodi was stopped and we are still waiting for the service to be restored.
Kathiresan (Periyakulam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் டன் மாம்பழங்கள் விளைச்சல் அடைகிறது. போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுலா ரீதியான வளர்ச்சி தேனி நகரில் பிரதான சாலைகளில் மழைநீர், கழிவுநீர் செல்லும் வடிகால்கள் தூர்ந்து போய் உள்ளதால் புதிய வடிகால்கள் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.