தமிழக சட்டமன்ற தொகுதிகளின் வரிசையில் 2-வது தொகுதியாக பொன்னேரி தனித்தொகுதி விளங்குகிறது. இந்த தொகுதியில் மீஞ்சூர் ஒன்றியத்தின் 55 கிராம ஊராட்சிகளும், சோழவரத்தில் 24 கிராம ஊராட்சிகளும் மீஞ்சூர்,...
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் 19 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தி தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.38 கோடி மதிப்பீட்டில் மீன்வள ஆராய்ச்சி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி பொன்னேரியில் தொடங்கப்பட்டிருக்கிறது. நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை 400 அடி வெளிவட்ட சாலை ரூ.1,300 கோடி செலவில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. மீஞ்சூர் முதல் பழவேற்காடு வரை காட்டூர் வழியாக இரு வழிசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. மீஞ்சூர், சேகன்யம், உமிப்பேடு உள்பட 5 இடங்களில் ரூ.1 1/2 கோடி செலவில் சமுதாய கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.12 கோடி மதிப்பில் பேரிடர் பாதுகாப்பு மையங்கள், 4 இடங்களில் ரூ.17 லட்சம் செலவில் பஸ் நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. - எம்.எல்.ஏ., பொன்ராஜா
தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
பக்கிங்காம் கால்வாய் எண்ணூர் முகத்துவாரத்தில் இருந்து பழவேற்காடு வழியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் நீர் வழி தடத்தை மீண்டும் ஏற்படுத்தி படகு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். பழவேற்காடு ஏரியை தூர்வாரி மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும், ஏரியும் கடலும் கலக்கும் முகத்துவார பகுதியை ஆழப்படுத்திட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு