தொகுதிகள்: ராதாபுரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
239943
ஆண்
:
118693
பெண்
:
121249
திருநங்கை
:
1

நெல்லை மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சட்டசபை தொகுதியாக ராதாபுரம் தொகுதி விளங்குகிறது. ஆனால், தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கிறது. மழை போதிய அளவில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

உவரி கிராம மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கும் திட்டப்பணிக்கு ரூ.63 கோடி அனுமதி பெற்றுக் கொடுத்தேன். பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பெருமணல், கூத்தங்குளி ஆகிய ஊர்களில் தூண்டில் வளைவு அமைக்க அனுமதி பெற்றுக் கொடுத்து உள்ளேன். ரூ.5 கோடியே 60 லட்சம் செலவில் ராதாபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் யூனியன் லெவிஞ்சிபுரம் அருகே உள்ள ஜெயமாதாபுரத்தில் யூனியன் பள்ளிக்கூடம், ஆத்துக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வள்ளியூர்-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வள்ளியூரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டது. கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே பாலம், பழவூர், செட்டிகுளம், உவரியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. கூடங்குளத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க அனுமதி வாங்கி கொடுத்தேன். நாங்குநேரி- உவரி சாலை பணிகளுக்கு ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடற்கரை சாலையில் பணிகள் நடக்கிறது. கூடங்குளம் பகுதி வளர்ச்சிக்காக அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் வீடுகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளநீர் கால்வாய்த்திட்டம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தக்கூடிய திட்டமாகும். தற்போது தான் அந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும். - எம்.எல்.ஏ. எஸ்.மைக்கேல் ராயப்பன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The hundred days employment scheme should be improved to two hundred scheme.
Saroja (Uvari)
அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும்.
Jona.A (Koodankulam)
வாட்டர் சௌர்சே,ஆக்ரிகில்டுரே தேவேல்ப்மென்ட்,industrials develpment
ulaganathan (vallivoor)
திசையன்விளை தனி தாலுகா. விமான நிலையம் கூடங்குளம் அருகில்.
சுரேஷ் ரெ (சென்னை)
எங்கள் தொகுதியில் உள்ள அடங்கற்குலம் பஞ்ச்யத்தை உரல்வாஇமொழி பஞ்சயதாக மாற்ற பட வேண்டும்
சுயம்புlingam (uralvaimozhi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வெள்ளநீர் கால்வாய்த்திட்டம். கடல்நீர் ஊருக்குள் வராமல் இருக்க தூண்டில் வளைவு.