தொகுதிகள்: ராமநாதபுரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
இராமநாதபுரம்
வாக்காளர்கள்
:
284330
ஆண்
:
141900
பெண்
:
142412
திருநங்கை
:
18

தொகுதி சீரமைப்புக்கு பின் 2011-ல் முதல் சட்டசபை தேர்தலை சந்தித்த ராமநாதபுரம் தொகுதியில் ராமேசுவரம் தாலுகா பகுதிகள், ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், கீழக்கரை மற்றும் மண்டபம் 3-ம் நிலை நகராட்சி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தியுள்ளது. ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு, ராமநாதபுரம், உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.2 3/4 கோடியில் பள்ளி கட்டிடங்கள், ரூ.1 கோடியில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தனுஷ்கோடி வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டம், பாம்பன் ரோடு பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது.- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.:-

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

மனிதநேய மக்கள் கட்சி 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The roads should be widened to reduce traffic congestion. Setting up an Arts college would help students.
Kala (Ramanathapuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ராமேசுவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலையே இருந்து வருகின்றது. புண்ணிய பூமியான ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.