ராணிப்பேட்டை தொகுதி தொழிற்பேட்டையை உள்ளடக்கியது. இந்த தொகுதி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம் ஆகிய 3 நகரசபைகளும், வாலாஜா...
வள்ளுவம்பாக்கம் முதலிய ஊர்களில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வாலாஜாவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கடப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாலாஜா, ராணிப்பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாலாஜாவில் புதிய நூலகம், மேல்விஷாரம் பகுதியில் நெரிசலை குறைக்க புதிய சாலை, கீழ்விஷாரம் பகுதியில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ராணிப்பேட்டை முத்துக்கடையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனந்தலையில் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடம், வாலாஜாவில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதலிய எண்ணற்ற பணிகள் நடைபெற்றுள்ளன.- எம்.எல்.ஏ. முகம்மதுஜான்
சுயேட்சை 3 முறை வென்றுள்ளது
தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
இந்த பகுதியில் உள்ள தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. முழுமையற்ற மேம்பாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.