தொகுதிகள்: சங்கரன்கோவில் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
233227
ஆண்
:
114124
பெண்
:
119098
திருநங்கை
:
5

சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ள சங்கரன்கோவில், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த நகராகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. சுற்று வட்டார விவசாய மக்களின் வியாபார மையமாகவும் உள்ளது. பூ மார்க்கெட்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சங்கரநாராயண சுவாமி கோவில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு, மேம்பாட்டு பணிக்கு ரூ.36 லட்சம் ஒதுக்¦டு செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில், மிளகாய் வத்தலை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. வன்னிக்கோனந்தலில், விவசாயிகளுக்கான எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் முதன்முறையாக கொண்டு வரப்பட்டு உள்ளது. குருவிகுளம் ஒன்றியம் நக்கலமுத்தன்பட்டியில் ரூ.5 கோடியில் புதிய துணைமின் நிலையமும், கலிங்கப்பட்டி-கரிசல்குளம் இடையேயும், மலையடிப்பட்டியிலும் தலா ரூ.4 கோடியில் உயர்மட்ட பாலங்கள், குருக்கள்பட்டியில் அரசு தொழிற்பேட்டை, தண்ணீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன. பிள்ளையார்நத்தம், சாயமலை கிராமங்களில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ரூ.2 கோடியில் சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need more ambulances.
Maheshwari (Sankarankoil)

முக்கிய எதிர்பார்ப்புகள்

எங்கள் பகுதியில் பூக்கள் சாகுபடி சிறப்பாக நடைபெறுகிறது. எனவே வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திருவேங்கடத்தில் சில அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. திருவேங்கடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. மின்வாரிய கட்டண வசூல் மையம், கலிங்கப்பட்டிக்கு சென்றுவிட்டது. விவசாயத்துக்கு பாசன வசதி பெற செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைத்து கால்வாய் ஏற்படுத்த வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு 1985-ம் ஆண்டு கொண்டு வந்த கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.