தொகுதிகள்: சேந்தமங்கலம் (எஸ்.டி.)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
229835
ஆண்
:
113081
பெண்
:
116746
திருநங்கை
:
8

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் (தனி) சட்டசபை தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவஞானம் பிள்ளை வெற்றி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை தனிதாலுகாவாக அறிவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.கொல்லிமலை மாற்றுப்பாதை பணி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் தார்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடியில் 15 அங்கன்வாடி மையங்கள், 5 சத்துணவு மையங்கள், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சிமெண்டு சாலை, சோலார் விளக்கு, தளவாட பொருட்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். கொல்லிமலையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 3 இடங்களில் கிணறு வெட்டப்பட்டு உள்ளது. சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை எடப்புளிநாடு பகுதிகளில் புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன். - எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சேந்தமங்கலத்தை சுற்றி கோழிப்பண்ணைகள் தான் அதிகம் உள்ளன. விவசாய கூலி வேலை இல்லாத நேரத்தில் வேறு தொழில்களுக்கு செல்லும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.
சித்ராதுரை (சேந்தமங்கலம்)
கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், ஓய்வூதியம் பெறுவோர் போன்ற தகுதியான நபர்களுக்கு அரசின் சலுகைகள் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது.
தமிழ்செல்வி (காந்திபுரம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசு கல்லூரி, தொழிற்சாலைகள் அமைய வேண்டும். கொல்லிமலை அடிவார பகுதியில் தடுப்பு அணை.