தொகுதிகள்: சோழவந்தான் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
205497
ஆண்
:
101407
பெண்
:
104088
திருநங்கை
:
2

1962-ம் ஆண்டு நிலக்கோட்டை (தனி) தொகுதியில் இருந்து சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவானதுதான் சோழவந்தான். முதல்தேர்தலை தனித்தொகுதியாகவே சந்தித்த சோழவந்தான்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக என்.எம்.ஆர் ஆக பணி புரிந்த 114 பேர் நிரந்தர பணியாளர் ஆக்கப்பட்டுள்ளனர். பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர்களுக்கு பணிக்கொடை பெற்றுத்தரப்பட்டு உள்ளது. அலங்காநல்லூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம், வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த வளாகத்துடன் கூடிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு பெற்றுத்தந்தது. சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையில் கச்சைகட்டி, முள்ளிப்பள்ளம், மேலக்கால், அலங்காநல்லூர், சேந்தமங்கலம், சிறுவாலை ஆகிய ஊர்களின் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தந்தது. விவசாயத்தை நம்பி வாழும் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணிக்கு ரூ.30 கோடி பெற்றுத்தந்தது. பரவை கொண்டமாரி ஓடை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தியது. பொதுப்பணித்துறை மூலமாக தென்கரை கண்மாய்க்கு ரூ.2 கோடி, சி.புதூர் கண்மாய், வாவிடமருதூர், பொதும்பு, தனிச்சியம், கல்லனை கண்மாய்கள் மற்றும் பழனியாண்டவர் கோவில் ஓடை தூர் வாரியது என மொத்தம் ரூ.75 கோடியில் பணி செய்தது. சுமார் ரூ.100 கோடிக்கு மேல் சோழவந்தான்-குமாரம் ரோடு, வாடிப்பட்டி நகர்புறச்சாலை, பாலமேடு-வலையபட்டி சாலை உள்பட பல்வேறு ஊர்களின் சாலைகள் போடப்பட்டு உள்ளன. குமாரத்தில் வேளாண்மை சேமிப்பு கிட்டங்கி கட்டிக்கொடுத்தது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் சோழவந்தான் தொகுதி முழுவதும் பெற்றுக்கொடுத்தது. கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவருடன் ரூ.2 கோடியில் கட்டிக்கொடுத்தது என மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முடித்து கொடுக்கப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. எம். வீ. கருப்பையா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

முக்கிய எதிர்பார்ப்புகள்

எங்கள் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, பிரசவம் போன்ற சிகிச்சைகளுக்காக அலங்காநல்லூருக்குதான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அங்கு இரவு நேரங்களில் செவிலியர்கள்தான் பணியில் உள்ளார்கள். டாக்டர்கள் இருப்பதில்லை. மேலும் போதிய வசதியும் கிடையாது. உயிருக்கு போராடும் நிலையில் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்குதான் செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் சூழ்நிலைதான் உள்ளது. இதனை தவிர்க்க போதிய வசதிகளை அந்த ஆஸ்பத்திரியில் செய்து தரவேண்டும் என்பது குட்டிமேய்க்கிபட்டி கிராம மக்களின் எதிர்பார்ப்பு