தொகுதிகள்: ஸ்ரீரங்கம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
283294
ஆண்
:
137626
பெண்
:
145646
திருநங்கை
:
22

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்காளர்களை கொண்டதாகவும், நகரங்கள், கிராமங்கள் என அதிக பரப்பளவையும் கொண்ட பெரிய தொகுதியாகவும் இருப்பது ஸ்ரீரங்கம் சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பஞ்சக்கரையில் 8 ஏக்கர் 60 சென்ட் பரப்பளவில் ரூ.48 கோடியில் ஒரே நேரத்தில் 1000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை ரூ.2 கோடியில் அதி நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.75 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலூர் அருகே ரூ.9 கோடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் திறக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் ஏழை, எளிய மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் 432 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மொண்டிப்பட்டியில் தமிழக அரசின் செய்தி தாள் நிறுவனம் சார்பில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.1,800 கோடியில் நிறுவப்பட்டு முதல்&அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் ரூ.24 கோடியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்களுக்கு தார்ச்சாலைகள், நாடக மேடைகள், கான்கிரீட் சாலைகளும் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன.கள்ளிக்குடி ஊராட்சி ராம்ஜி நகர் முதல் அருவாக்குடி வரை உள்ள சாலை ரூ.1 கோடியே 15 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மாத்தூர் சாலை ரூ.29 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டது. - சட்டமன்ற உறுப்பினர் எஸ். வளர்மதி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The price of the vegetables and the essential commodities are always high here. Encroachments on the roads should be cleared and tar roads should be laid.
Padma Muralidharan (Ranga Nagar)
Dmk canditate
baskar (srirangam trichy)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஸ்ரீரங்கம் நகரில் நீண்ட காலமாக அடிமனை பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை.