தொகுதிகள்: சூலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
281890
ஆண்
:
139616
பெண்
:
142271
திருநங்கை
:
3

விவசாயத்திலும், விசைத்தறி தொழிலிலும் கோவை மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக சூலூர் விளங்குகிறது. தொகுதி சீரமைப்புக்கு முன்னர் பல்லடம் தொகுதியாக விளங்கிய இந்த தொகுதி, சூலூர்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சுல்தான் பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் பத்தாம் வகுப்பு வரை இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படிப்பதற்காக மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சியில் போலீஸ் துணைக்கண் காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகம் புதிதாகத்திறக்கப்பட்டுள்ளது. சூலூர் தாலூகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற நிதியில் இருந்து புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சூலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். சூலூர் சோமனூர் கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி தரம் உயர்த்தப்பட வேண்டும்.
kirthiga (சூலூர்)
மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு கோவை அல்லது திருப்பூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே சூலூரில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தந்தால் மாணவ- மாணவிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
எஸ்.ஆரோக்கிய பிரபா (சூலூர்)
விதவை பெண்களுக்கு அரசு திட்டங்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஞ்சம்மாள் (கோவை)
சோமனூர் ரெயில் நிலையம் பராமரிப்பின்றி உள்ளது அதை மேம்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்
பிரபாகரன் (கருமத்தம்பட்டி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சூலூர் மற்றும் அதனைச் சுற்றிஉள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்ல கோவை அல்லது திருப்பூருக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் சூலூரில் அரசு கலைக் கல்லூரி அமைய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. சோமனூர் ரெயில் நிலையம் பராமரிப்பின்றி உள்ளது அதை மேம்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும். சூலூர் சோமனூர் கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி தரம் உயர்த்தப்பட வேண்டும்.