தொகுதிகள்: தளி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
229737
ஆண்
:
118843
பெண்
:
110887
திருநங்கை
:
7

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளை உள்ளடக்கியது தளி சட்டசபை தொகுதி. 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதி உத்தனப்பள்ளி சட்டசபை தொகுதியாக இருந்தது. 1977-க்கு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பணிகளை நிறைவேற்றி உள்ளேன். 22 அரசு நடுநிலைப்பள்ளிகளை உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளேன். 6 அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளேன். மத்திய அரசின் மாதிரி பள்ளியை கெலமங்கலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன். தொகுதி மாணவ, மாணவிகள் உயர் படிப்பிற்காக பெங்களூருவோ, கிருஷ்ணகிரியோ, ஓசூரோ செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது எனது தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஞ்செட்டி, தளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 8 மலைகிராமங்கள் வனப்பகுதியையொட்டி உள்ளது. இதற்காக வனத்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல யானைகள் ஊருக்குள் வருவது கட்டுபடுத்தப்பட்டுள்ளது. யானைகளால் விவசாய பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 2 முறை வென்றுள்ளது

பா.ஜனதா 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தொகுதியில் கல்வி வளர்ச்சி முழுமையாக பெறவில்லை. இன்னும் பல குக்கிராமங்களில் கல்வி அறிவு பெறாத மக்கள் உள்ளனர்.
பாரதி (தேன்கனிக்கோட்டை)
தளி தொகுதியில் முக்கிய பிரச்சினையாக யானைகள் தொல்லை உள்ளது. இதனால் விவசாய பயிர்கள் நாசம் ஆவதும், உயிர் இழப்பும் உள்ளன.
அன்சர் (தேன்கனிக்கோட்டை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வன விலங்குகள் தொல்லை. சாலை வசதி, போக்குவரத்து வசதி.