தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளுள் திரு.வி.க. நகர்(தனி) தொகுதியும் ஒன்று. எழும்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்த சில வார்டுகளையும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில...
சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். முதியோருக்கு பென்சன் உதவி கிடைக்க உதவியிருக்கிறோம். மழைக்காலத்தில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். கால்வாய்களில் அதிநவீன எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றி, நீரோட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். குடிசை மாற்று வாரியம் மூலம் புளியந்தோப்பில் வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது.
அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தி.மு.க. 1 முறை வென்றுள்ளது
தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில் மக்களின் பிரதான கோரிக்கையாக ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்த வேண்டும் என்பதுதான். புளியந்தோப்பு பகுதியில் உள்ள இறைச்சி கூடமான ஆட்டுத்தொட்டி பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு அரசு கல்லூரி அல்லது தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் பிரச்சினையும் உள்ளது.