தொகுதிகள்: திருமங்கலம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
258800
ஆண்
:
126584
பெண்
:
132212
திருநங்கை
:
4

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த சட்டசபை தேர்தல்கள் அனைத்தையும் சந்தித்த தொகுதிகளில் திருமங்கலமும் ஒன்று. 1957, 1962 ஆண்டுகளில் நடந்த தொகுதி சீரமைப்பிலும் கூட எந்தவித மாற்றமும் செய்யப்படாத தொகுதி....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருமங்கலம் நகராட்சியில் ரூ.50 கோடி செலவில் பேவர்பிளாக் சாலைகள், தார்ச்சாலைகள் , கக்கன்காலனி, அண்ணாநகர், மம்சாபுரத்தில் ரூ.11 1/2 கோடி செலவில் கால்வாய்கள் சீரமைப்பு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட வேலைகள் முடிக்கப்பட்டு உள்ளன. கல்லுகுளத்தில் ரூ.2 1/2 கோடி, ஆலம்பட்டியில் ரூ.10 1/2 கோடிம், அகந்தாபட்டி-கள்ளிக்குடி சாலையில் ரூ.1 1/2 கோடியிலும் உயர்மட்டப்பாலங்கள், திருமங்கலம் தேவர்சிலையில் இருந்து பழைய விமானநிலையரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.74 1/2 கோடி திட்ட மதிப்பில் ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. ரூ.75 லட்சத்தில் மின்மயானம் கட்டப்பட்டுள்ளது. 9 பழைய வழித்தடத்திலும், 23 புதிய வழித்தடத்திலும் பஸ்கள் விடப்பட்டுள்ளன. பேரையூரில் உரிமையியல் மற்றும் சார்பு நீதிமன்றம், ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. செக்கானூரணியில் கள்ளர் சீரமைப்பு திட்டத்தில் அரசு பாலிடெக்னிக், கப்பலூரில் அரசு கல்லூரி தொடங்கி 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. சிவரக்கோட்டையில் ரூ.1 கோடியில் கடலை உடைக்கும் எந்திரம் கொண்டு வரப்பட்டு உள்ளது. செக்கானூரணியில் அரசு போக்குவரத்து பணிமனை, ரூ.50 லட்சத்தில் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம், துணைமின்நிலையம், கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 1/2 கோடியில் கட்டிடம், பூசலப்புரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் தற்போது மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. கள்ளிக்குடியில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரியும், 108 ஆம்புலன்சும் கொண்டு வரப்பட்டு உள்ளன. 11 கண்மாய்களின் மடைகள் பழுதுபார்க்கப்பட்டு, கண்மாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. - எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது

ஏ.ஐ.எப்.பி. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பேரையூருக்கு மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து நேரடி டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும், பெண்கள் கலைக்கல்லூரி வேண்டும்.
பெருமாள்ராஜா (திருமங்கலம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள். தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும். பெண்கள் கலைக்கல்லூரி வேண்டும்.