தொகுதிகள்: திருவள்ளூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
257462
ஆண்
:
126397
பெண்
:
131044
திருநங்கை
:
21

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்தூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் பழமை வாய்ந்த 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில் இங்கு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் ரூ.57 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பணி முடியும் நிலையில் உள்ளது. திருவள்ளூரில் ரூ.12 கோடி செலவில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 70 சதவீத சாலைகள் தார்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மணவாளநகரில் இருந்து திருவள்ளூர் தாலுகா அலுவலகம் வரை மழைநீர் வடிகால், நடைபாதை மற்றும் தார்ச்சாலை ரூ.26 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. பி.வி.ரமணா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைத்து தரவேண்டும். திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
குமார் (திருவள்ளூர்)
திருவள்ளூர் பஜாரில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர சீரமைக்கப்படவில்லை.
கமலக்கண்ணன் (திருவள்ளூர்)
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தின் போது சேதம் அடைந்த சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், தரைப்பாலங்கள் ஆகியவை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
நாகராஜ் (பாக்குப்பேட்டை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதியில் தலித் இன மக்கள் அதிகமாக உள்ளனர். அதே போல முதலியார், நாயுடு, வன்னியர்கள், நாடார், செட்டியார் ஆகியோரும் வசிக்கிறார்கள். திருவள்ளூர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை போன்ற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் திருவள்ளூரில் இருந்து மணவாளநகர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், பூந்தமல்லி, சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுறுகிறார்கள். திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் வராமல் வெளியிலேயே செல்லும் வகையில் புறவழிச்சாலையை அமைத்து தரவேண்டும், பஸ்கள் எளிதாக வந்து செல்ல திருவள்ளூரில் நவீன பஸ் நிலையம் அமைத்து தரவேண்டும். பயன்பாடு இல்லாமல் இருக்கும் உழவர் சந்தையை சீரமைத்து அதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா தலமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் பொழுது போக்கு மையம் மற்றும் விளையாட்டு பூங்காவை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடவேண்டும். மேலும் பூண்டி ஏரியில் சுற்றுலா படகு குழாம் அமைத்து தரவேண்டும். திருவள்ளூரில் முழுமையடையாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காக்களூர் ஏரியில் உள்ள முட்செடிகளை அகற்றி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்தாமல் உள்ள கழிவறைகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் வசதி செய்து தரவேண்டும் போன்றவை திருவள்ளூர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.