திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ளது திருவொற்றியூர் தொகுதி. தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் வரிசைப்பட்டியலில் இதுவரை 17-வது இடத்தில் இருந்து வந்த திருவொற்றியூர் தொகுதி தற்போது தொகுதி...
திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ளது திருவொற்றியூர் தொகுதி. தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் வரிசைப்பட்டியலில் இதுவரை 17-வது இடத்தில் இருந்து வந்த திருவொற்றியூர் தொகுதி தற்போது தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 10-வது இடத்தில் உள்ளது.
இந்த தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 194 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 499 பேர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 665 பேர். திருநங்கைகள் 30 பேர் உள்ளனர்.
இந்த தொகுதியில் 270 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் தாலுகாவிற்குட்பட்ட திருவொற்றிïர் தொகுதிக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவரம், பொன்னேரி தொகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சென்னையை அடுத்துள்ள இந்த தொகுதியில் திருவொற்றிïர், கத்திவாக்கம், மணலி ஆகிய 3 நகராட்சிகளும், சின்னசேக்காடு பேரூராட்சியும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் வில்லிவாக்கம், தாம்பரம் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய தொகுதியாக இருந்த திருவொற்றிïர் சட்டமன்ற தொகுதி தற்போது தொகுதி சீரமைப்பிற்கு பிறகு திருவொற்றியூர், மாதவரம் என்று இரண்டு சட்டமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றிïர் சட்டமன்ற தொகுதியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக்லேலண்ட், எம்.ஆர்.எப். உள்பட 20-க்கும் மேற்பட்ட கனரக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. எனவே தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகவும் உள்ளது.
கடற்கரை நகரங்களில் மிகவும் முக்கிய பழமையான நகரத்தில் ஒன்றாகவும் திருவொற்றிïர் தொகுதி இருந்து வருகிறது. திருவொற்றிïர் சட்டமன்ற தொகுதியில் மீனவர்கள், வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் பெருவாரியாக உள்ளனர். இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி. மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய 4 கட்சிகள் செல்வாக்கு பெற்று காணப்படுகின்றன.
திருவொற்றியூர் தொகுதியில் எந்த கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுகின்றார்களோ அவர்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பார்கள் என்பது தனிச்சிறப்பாகும்.
2006-ம் ஆண்டு தேர்தல் தே.மு.தி.க.விற்கு முதல் தேர்தல் என்றாலும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. திருவொற்றிïர் தொகுதியில் 5 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், 1 முறை காங்கிரசும், 1 முறை கா.கா.தே.கா.வும் வெற்றி பெற்றுள்ளது.
புதிதாக காசிமேடு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எர்ணாவூர் ஆல்இந்தியா ரேடியோ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி திருவொற்றிïர் தொகுதியில் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை திருவொற்றிïர் தொகுதியில் வெற்றி பெற்ற கே.பி.பி.சாமிக்கு அமைச்சர் பதவி (மீன்வளத்துறை) முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது.