தொகுதிகள்: தியாகராயநகர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
245019
ஆண்
:
121887
பெண்
:
123087
திருநங்கை
:
45

சென்னை நகரின் வணிக கேந்திரம் என்று அழைக்கப்படும் தியாகராயநகர் சட்டசபை தொகுதி 1957-ம் ஆண்டு உதயமானது. வெளியூர்களில் இருந்து வேலைத்தேடி சென்னை வருவோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரம் அளிக்கும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பக்தர்கள் வசதிக்காக வடபழனி முருகன் கோவிலில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 67 லட்சம் செலவில் பிரமாண்ட நிழற்குடை மற்றும் எல்.இ.டி. மின் விளக்கு கம்பங்கள் அமைத்து தந்துள்ளேன். பள்ளிகளில் ஆர்.ஓ. பிளாண்ட் குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்துள்ளேன். - எம்.எல்.ஏ. கலைராஜன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The infrastructure and traffic regulation should be improved according to the increasing crowd.
Lakshmi Narayanan (West Mambalam)
இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து காற்று மாசு தியாகராயநகரில் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகாயஷர்னி (வடபழனி)
தியாகராயநகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
தன்ராஜ் (ரங்கநாதன் தெரு)
கட்டமைப்பு வசதிகளும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கைகளும் இல்லாதது ஏமாற்றம்
லட்சுமி நாராயணன் (மேற்கு மாம்பலம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் தியாகராயநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் இல்லாததும், பொது இடங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் பலவீனம். மெட்ரோ ரெயில் சேவை (வடபழனி- அசோக்நகர்) கிடைத்ததை மக்கள் நிறையாக பார்த்தாலும், தொகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் நவீனப்படுத்தாமல் உள்ளதை குறையாக பார்க்கிறார்கள். மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகள் குளங்களாக மாறுவதை தடுக்க வேண்டும் என்பதும், கார்கள், இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் பிரதான கோரிக்கைகளாக இருக்கிறது.