தொகுதிகள்: தொண்டாமுத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
297327
ஆண்
:
148518
பெண்
:
148761
திருநங்கை
:
48

கோவை மாவட்டத்தின் பெரிய தொகுதியாக விளங்கி வந்த தொண்டாமுத்தூர் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது அந்த பெருமையை இழந்தது. தொண்டாமுத்தூர் தொகுதி 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

7 பேரூராட்சிகள், 7 ஊராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 134 குடியிருப்புகளில் உள்ள 1 1/2 லட்சம் மக்கள் பயன் அடையும் வகையில் பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.2 1/2 கோடியில் மத்வராயபுரம், இருட்டுப் பள்ளத்தில் உயர்மட்ட மேம்பாலம், ரூ. 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் தொண்டாமுத்தூர்- நரசீபுரம் சாலை, தாளியூர் ஓடையில் உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் நரசீபுரம் முதல் பூண்டி வரையிலான தார்சாலை, ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் பச்சான்வயல் முதல் வைதேகி நீர்வீழ்ச்சி வரையிலான தார் சாலை, ரூ.3 கோடியே 82 லட்சம் செலவில் தொண்டாமுத்தூர் -மாதம்பட்டி சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 73 லட்சம் செலவில் பூலுவப்பட்டியில் அரசு சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமித்தால் பொது மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
கௌதம் கார்த்திக் (தொண்டாமுத்தூர்)
திராட்சைக்கு போதுமான விலை கிடைக்காத நேரத்தில் இருப்பு வைத்து விற்க தேவையான குளிர்பதன கிடங்கு மற்ற விளைபொருட்களுக்கு தேவையான சேமிப்புக் கிடங்கு அமைத்து தருவதோடு திராட்சை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகளில் கடன் மானியம் தர அரசு வழி வகை செய்ய வேண்டும்
ஷைனி சிவகுமார் (தொண்டாமுத்தூர்)
Need Government Engineering College and Employment centre. Similarly new bus routes should be available.
Murugesh (Karadimadai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

காட்டுயானைகளின் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவசாய பகுதியில் ஊடுருவி பயிர்களை நாசம் செய்து வந்த யானைகள் தற்போது குடியிருப்பு பகுதியிலும் சாதாரணமாக உலாவரத் தொடங்கிவிட்டது. பன்னீர் திராட்சை இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது. திராட்சைக்கு போதுமான விலை கிடைக்காத நேரத்தில் இருப்பு வைத்து விற்க தேவையான குளிர்பதன கிடங்கு. நொய்யல் ஆறு பாய்ந்தோடும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சாக்கடை நீர் ஓடும் பகுதியாக மாறியுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.