தொகுதிகள்: துறையூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
210431
ஆண்
:
102371
பெண்
:
108059
திருநங்கை
:
1

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் துறையூர் தனித்தொகுதி ஆகும். துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும், துறையூர் நகராட்சி, உப்பிலியாபுரம், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

துறையூரில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நீதிமன்ற வளாகம் , துறையூர் ரூ.3 கோடியில் நகராட்சி அலுவலகம், ரூ.1Ñ கோடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் ரூ.95 லட்சத்திலும், உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. பச்சை மலை வாழ் மக்கள் மேம்பாட்டிற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் பழக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளன. வீரமச்சான் பட்டி, தளுகை, பி.மேட்டூர், டாப்செங்காட்டு பட்டி உள்பட 10 இடங்களில் தலா ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கால்நடை மருந்தகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தொகுதியில் பல ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. புளியஞ்சோலை சுற்றுலா தளம் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பச்சைமலையில் உள்ள செம்புளிச்சாம்பட்டி, மருதை, ஏரிக்காடு ஆகிய கிராமங்களில் சாலை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. துறையூர் நகரிலும், பல்வேறு கிராமங்களிலும் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திரா காந்தி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The vegetable market should be shifted to a spacious place and the people should be provided drinking water from Cauvery joint water scheme.
Lakshmi (Kannanur)
Government Arts College
a.saravanan (Thuraiyur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

துறையூர் நகராட்சி பகுதியில் உள்ள சின்ன ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து கழிவு நீரும் கலந்து வருகிறது. . ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். துறையூர் அருகே உள்ள பச்சைமலைக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.