தொகுதிகள்: திண்டிவனம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
221824
ஆண்
:
109558
பெண்
:
112260
திருநங்கை
:
6

திண்டிவனம் தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு உதயமானது. அப்போது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட பொதுத்தொகுதியாக இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக மயிலம் தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் சூரிய மின்விளக்கு அமைத்து செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 25 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டிவனம் ஜெயப்புரம், செஞ்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ரூ.37 1/2 செலவில் பயணியர் நிழற்குடை, 30 இடங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் கலையரங்கம். ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள், கூச்சிக்கொளத்தூரில் ரூ.70 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் ஆகிய வளர்ச்சிப்பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக மரக்காணம் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.காவேரிப்பாக்கம் தரைப்பாலத்தை ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. - சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிதாஸ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இதுவரை ரேசன் கார்டுகள் வழங்கப்படவில்லை.
நித்யா (முருங்கப்பாக்கம்)
சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக அகல ரெயில்பாதை அமைத்து ரெயில் போக்குவரத்து விட வேண்டும். இதன்மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
கோவிந்தசாமி (மரக்காணம்)
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தின் மைய பகுதியான பிரம்மதேசத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்துக்கொடுக்க வேண்டும்
ஆர்.தணிகைவேல் (மொளசூர்)
திண்டிவனம் நகரில் புதிய பஸ் நிலையம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நேரு வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கிறது.
ஜி.முருகன் (திண்டிவனம்)
Need new bus stand at Tindivanam and encroachments should be cleared.
G.Murugan (Tindivanam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திண்டிவனத்துக்கு வரும் தண்ணீரும் போதுமானதாக இல்லை, இதனால் வசந்தபுரம், நல்லியகோடான் நகர் உள்ளிட்ட சில இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. கிடங்கல்-2 ஏரியின் உபரி நீர் செல்வதற்கான கால்வாய் ஆக்கிரமிப்பால் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதனால் மழைகாலங்களில் வகாப்நகர் மற்றும் புதுச்சேரி சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.