தொகுதிகள்: திருத்தணி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
273660
ஆண்
:
134574
பெண்
:
139056
திருநங்கை
:
30

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருத்தணி சட்டமன்ற தொகுதி. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது அருகாமையில் உள்ள பள்ளிப்பட்டு தொகுதி முழுவதும் திருத்தணி தொகுதியுடன் இணைக்கப்பட்டது....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்நிலையம் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிகளுக்கு சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் தொகுதியில் உள்ள மலைகள் சார்ந்த கிராம பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு 2-வது மலைப்பாதை அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல முருகன் கோவில் ராஜகோபுர பணிகளை முழுமையாக நடத்தி முடிக்க அறநிலைய ஆட்சித்துறையின் சார்பில் தேவையான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருத்தணி தொகுதியில் உள்ள அனைவருக்கும் என்னால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்வேன்.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஆர்.கே.பேட்டை பகுதியில் பஸ் நிலையம் அமைத்து தரவேண்டும். ஆர்.கே.பேட்டையில் இருந்து சென்னை மற்றும் வேலூருக்கு நேரடியாக அரசு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
ஸ்ரீதர் (ஆர்.கே.பேட்டை)
திருத்தணி பகுதியில் இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
ஸ்ரீராமுலு (திருத்தணி)
திருத்தணி திருவல்லாங்காடு ஓன்றியத்தின் பெயர்கள்
தண்டபாணி (திருத்தணி)
டி. கிருஷ்ணமூர்த்தி,
சுரேஷ் (திருத்தணி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருத்தணி நகரில் உள்ள 21 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இங்குள்ள அருங்குளம் ஆற்றின் நீரை சுத்திகரித்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், விழா காலங்களிலும், திருமண நாட்களிலும் நகரில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது திருத்தணி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திருத்தணி காந்தி ரோட்டில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தை சீரமைத்து அதில் படகு சவாரி அமைத்து தரவேண்டும், திருத்தணி- கன்னிகாபுரம் சாலையில் கன்னி கோவிலில் உள்ள பழமையான மரங்களை பாதுகாத்து அங்குள்ள இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு சுற்றுலாத்துறை சார்பில் பறவைகள் சரணாலயம் அமைத்து தரவேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரதான படிக்கட்டுகள் வழியில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், பாதியில் நின்றுபோன திருத்தணி முருகன் கோவில் ராஜ கோபுர பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், திருத்தணி பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை மக்களுக்காக குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.