தொகுதிகள்: திருச்சி கிழக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
242466
ஆண்
:
118198
பெண்
:
124236
திருநங்கை
:
32

ஒரு லட்சம் வாக்குகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் உள்ள மிக சிறிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருச்சி-1 என்ற பெயரில் நீண்டகாலம் அழைக்கப்பட்டு வந்த இந்த தொகுதி, கடந்த 2009-ம் ஆண்டு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சுமார் ரூ.10 கோடிக்கு பல்வேறு திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. 18 நியாய விலைக்கடைகள், 11 இடங்களில் பயணிகள் நிழற்குடைகள், 9 சத்துணவு மையங்கள்,. 6 அங்கன்வாடி மையங்கள், 5 பள்ளிகளில் கழிவறைகள், 4 பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள், 3 பள்ளிகளில் சமையல் கூடங்கள், 3 இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 2 இடங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. 45 இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 90 உயர் மின் விளக்குகள் போடப்பட்டு உள்ளன. உடையான் பட்டியில் இருந்து சமயபுரம், வயலூர் முருகன் கோவில்களுக்கும் பஸ் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. ஆர். மனோகரன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

T.V.S Tollgate-Ponmalai G corner route should be converted to single way lane to prevent accidents and a sub way should be constructed here.
Chandru, contractor (Sangiliyandapuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து பொன்மலை ஜி.கார்னருக்கு செல்லும் சாலையை ஒரு வழிப்பாதையாக அறிவிக்க வேண்டும். இந்த சாலை இருவழிப்பாதையாக பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இந்த பிரச்சினையை தீர்க்க பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டும். பெண்கள் முன்னேற்றத்துக்கான, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தப்படவில்லை. எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்பட எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் திருட்டு பயம்தான் அதிகமாக உள்ளது. வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை குறி வைத்து நகை பறித்து செல்வதால் போலீசார் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதற்கு காரணம் தண்ணீர் வடிந்து செல்லும் பாதையில் செங்குளம் அருகே ஒரு பெரிய தொழிற்சாலை, தனியார் நிறுவனங்கள் உள்ளன. எனவே நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.