தொகுதிகள்: உதகமண்டலம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நீலகிரி
வாக்காளர்கள்
:
201842
ஆண்
:
97757
பெண்
:
104081
திருநங்கை
:
4

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள்தான் கண்டுபிடித்தனர். அவர்கள் இங்கு பல்வேறு பூங்காக்கள் மற்றும் மலை ரெயில், குதிரை பந்தய மைதானம், சாலை வசதி, அணைகள் என பல்வேறு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறார். இதன்படி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம்ஆண்டு வரை விவசாயிகளுக்கு ரூ.17 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இணைப்பு சாலைகள், சமுதாய கூடம், குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு ரூ.4 1/2 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியும் வழங்கப்பட்டு உள்ளது. ரூ.23 கோடியில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே ரூ.21 கோடி செலவில் நீலகிரி பழங்குடியினர் கலாசார மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ. புத்திச்சந்திரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.
வெங்கட் (ஊட்டி)
கோவாவில் இருப்பது போன்று ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும். உயர்தர ஐ.ஐ.டி. பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
ஹீராலால் (ஊட்டி)
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மக்களின் நலன் கருதி மின் விசிறிக்கு பதிலாக மின் காந்த அடுப்பு வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது.
யசோதா (ஊட்டி)
The government schemes have been useful and we appreciate the free hot plate provided.
Yasodha, Homemaker (Ooty)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஊட்டி சட்டமன்ற தொகுதி விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பியே உள்ளது. இதில் பச்சை தேயிலைக்கு கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி விலைபகிர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுதவிர ஊட்டி பொதுமக்கள் சுற்றுலா வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து உள்ளனர். மேலும் 3-வது மாற்றுப்பாதை திட்டம், கேபிள் கார் திட்டம், ஹெலிகாப்டர் சேவை, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும் என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.