தொகுதிகள்: ஊத்தங்கரை (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
218647
ஆண்
:
110603
பெண்
:
108020
திருநங்கை
:
24

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஒன்றான ஊத்தங்கரை தனி தொகுதி ஆகும். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி கடந்த 2004-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஊத்தங்கரை தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ரூ.33 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. பாவக்கல் ஆற்றின் குறுக்கே ரூ.2 1/2 கோடியில் பாலமும், பாரூர் ஏரி கிழக்கு கால்வாய் திட்டத்தின் கீழ் 34 ஏரிகளை இணைக்கும் திட்டத்திற்கு முதல் கட்ட நிதியாக ரூ.13 கோடியே 70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரையில் சார்பு நீதிமன்றம், ரூ.2 கோடியில் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டிடம், ரூ.80 லட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகம், ரூ.1 கோடியே 60 லட்சத்தில் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சியில் பாலம், அரசு கால்நடை மருத்துவமனைகள், காரப்பட்டு, கல்லாவி, கே.எட்டிப்பட்டி, சிங்காரபேட்டை, காட்டேரி கிராமங்களில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் புதிய கட்டிடங்கள், புதிய கால்நடை மருத்துவமனைகள், கொடமாண்டப்பட்டியில் 33 படுக்கை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. தண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை.
தேவி (அனாசந்திரம்)
கல்லாவி முதல் மொரப்பூர் வரை சாலை அமைக்கப்படவில்லை. விவசாயம் பெருக வேலம்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவில்லை.
விஜயலட்சுமி (எஸ்.பாப்பாரப்பட்டி)
பாம்பாறு அணை தூர்வாரப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ரவி (மூன்றம்பட்டி ஊராட்சி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பாம்பாறு அணை தூர்வாரப்பட வேண்டும், ஏரிகள் ஆக்கிரமிப்பு. கிராமப்பகுதிகளில் சாலை பணிகள்.