தொகுதிகள்: வேதாரண்யம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாகப்பட்டினம்
வாக்காளர்கள்
:
180238
ஆண்
:
88869
பெண்
:
91369
திருநங்கை
:
0

நாகை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக கீழ்வேளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கோவில்பத்து ஊராட்சியில் சேமிப்புக்கிடங்கு, தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஆறுகாட்டுத் துறையில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு கட்டிடம், பெரியகுத்தகை ஊராட்சியில் சமுதாயக்கூடம், வேதாரண்யம் பட்டினத்தில் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கோடியக்கரையில் புயல் பாதுகாப்பு கட்டிடம், வேதாரண்யத்தில் சார்நிலை கருவூல அலுவலகம், பஞ்சநதிக்குளம் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம், கள்ளிமேட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி, நாலுவேதபதியில் அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வேதாரண்யம், தோப்புத்துறையில் மாணவர்கள் தங்கும் விடுதி, தகட்டூரில் மாணவிகள் தங்கும் விடுதி, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. காமராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up industries and provide employment to youngsters.
Kanagasundaram (Kattharipulam)
கோடியக்கரையை அனைத்து பகுதி மக்களும் வந்து போகும் சுற்றுலாத்தளமாக மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க,விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். வேதாரணியம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.
ஜேவி (சென்னை)
நகராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டுவதற்கு கடன் வழங்க வேண்டும் மற்றும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்
வ.ரமேஷ் (வேதாரணியம்)
அனைத்து தரைப்பாலங்களும் நீக்கப்பட்டு கான்க்ரீட் பாலம் அமைக்க வேன்டும். மேலும் நீர்நிலைகள் மேம்படுத்தவேண்டும். தரமான சாலைகள் வேண்டும்.
N.S.ravi (ஆயக்காரன்புலம் முதல் சேத்தி)
அ கல ரயில் பாதை,கிழக்கு கடற்கரை சாலை,உப்பு தொழிற்சாலை, தஞ்சாவூர்-கோடிக்கரை தேசிய நெடுஞ்சாலை
வினோத் (வேதாரண்யம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வேதாரண்யம் தொகுதியை பொறுத்தவரை இங்கு ரெயில்வழித்தடம் இல்லை. அகல ரெயில்பாதை பணிக்காக பாலங்கள் கட்டப்படும் இன்னும் வழித்தடம் அமைக்கும் பணி தொடங்காமல் உள்ளது. துறைமுகம் இல்லை.