தொகுதிகள்: வேடசந்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
246178
ஆண்
:
121588
பெண்
:
124586
திருநங்கை
:
4

வானம் பார்த்த பூமியாக திகழ்கிற பல்வேறு கிராமங்களை தன்னகத்தே கொண்டதாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே, அதிக கிராமங்களை கொண்ட தொகுதி என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

என்னுடைய தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மேஜை- நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், வாகன நிறுத்தம், கலையரங்கம், வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். குடகனாற்றின் குறுக்கே கூம்பூர், திருக்கூர்ணம் ஆகிய இடங்களில் தடுப்பணைகளும், பல்வேறு ஓடைகளின் குறுக்கே சுமார் 200 தடுப்பணைகளும் கட்டப்பட்டு நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க 300 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 4 1/2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 3/4 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 30 படுக்கைகளை கொண்டதாக எரியோடு, குஜிலியம்பாறை அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தென்னம்பட்டி, அய்யலூர், மாரம்பாடி, பாகாநத்தம், தி.கூடலூர், கோம்பை ஆகிய இடங்களில் இருந்த கால்நடை ஆஸ்பத்திரிகள் கால்நடை மருந்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. வேடசந்தூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிக்கு எனது சொந்த நிலத்தில் 7 ஏக்கர் 28 சென்ட் வழங்கி, தற்போது அங்கு சுமார் ரூ.4 1/2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. - பழனிச்சாமி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜா) 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் முழுமையடையாத நிலையில் உள்ளது.
ராஜேந்திரன் (குஜிலியம்பாறை)
வடமதுரையில் பஸ்நிலையம் இல்லாததால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அங்கு பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞானசேகரன் (வடமதுரை)
எங்கள் ஊரில் மரகன்றுகள் நிறைய நட வேண்டும்
KARUNANITHI (Usilampatty)
எங்கள் தொகுதியில் தக்காளியில் இருந்து ஜுஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்
yuvaraj (vedasandur)
We need bus stand in Vadamadurai and streetlights should be erected in the road towards A.V. Patti.
Gnanasekaran, Auto Driver (Vedasandur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அய்யலூர், வேடசந்தூர், எரியோடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தக்காளி, வெங்காயம் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருப்பதால், சில நேரத்தில் தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் தள்ளாடி கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தக்காளிக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அய்யலூரில் தக்காளியில் இருந்து ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும். அய்யலூரில் நடக்கிற ஆட்டுச்சந்தை பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்.