தொகுதிகள்: விக்கிரவாண்டி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
218395
ஆண்
:
109123
பெண்
:
109249
திருநங்கை
:
23

விழுப்புரம் மாவட்டத்தில் நவீன அரிசி ஆலைகள் நிறைந்த தொகுதி விக்கிரவாண்டி. இந்த தொகுதியின் வரலாற்று பக்கங்களை புரட்டி பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் தொகுதி மறுசீரமைப்பின் போது விக்கிரவாண்டி தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

விக்கிரவாண்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தாலுகா அலுவலகமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ராமமூர்த்தி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி கொடுக்காமல் திரும்ப திரும்ப தகுதித்தேர்வு நடத்தி அலைக்கழிக்கிறார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யலாம்.
சுப்பிரமணி (விக்கிரவாண்டி)
படித்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்.
விஷ்ணுபிரியா (குப்பம் கிராமம்)
காணையில் இருந்து விக்கிரவாண்டிக்கு செல்ல நேரடி பஸ் வசதியில்லை. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமானால் விழுப்புரத்துக்கு சென்றுதான் விக்கிரவாண்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒருநாள் முழுவதும் விரயமாகிறது.
ராதாகிருஷ்ணன் (காணை)
விக்கிரவாண்டி தொகுதியில் பெரும்பாலான மக்கள் மானாவாரி விவசாயத்தை நம்பிதான் உள்ளனர். எனவே இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
கிருஷ்ணன் (விக்கிரவாண்டி)
Government should set up a milk processing centre in our area and also create job opportunities for youngsters.
Vishnupriya (Kuppam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இங்குள்ள பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் வராகநதியின் குறுக்கே தடுப்பணை கட்டினால் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற வாய்ப்பு இருந்தும் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் தொகுதி மக்களின் நிறைவேறாத கனவு திட்டங்களாக உள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரியாக உள்ளதால் மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை, கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு செல்கிறார்கள். படித்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்.