தொகுதிகள்: விளவங்கோடு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கன்னியாகுமரி
வாக்காளர்கள்
:
242595
ஆண்
:
118876
பெண்
:
123700
திருநங்கை
:
19

விளவங்கோடு தொகுதி பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாகும். குமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவிலுக்கு அடுத்த பெரிய நகரமான மார்த்தாண்டம் நகரம் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் ரூ.23 கோடி மதிப்பில் பாலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. திக்குறிச்சி- வள்ளக்கடவு- பயணம் பாலம் மட்டும் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட பெரிய பாலம் ஆகும். டையாலுமூடு பாலம், கற்றுவா- அணைமுகம், ஆனைக்குண்டு பாலம் போன்றவையும், களியல்- நெட்டா சாலை, அருமனை- பனச்சமூடு சாலை, ஆலுங்சோலை- ஆறுகாணி, பத்துகாணி- குழித்துறை- ஆறுகாணி, மார்த்தாண்டம்- பனச்சமூடு, புத்தன்சாலை- பனச்சமூடு சாலை உள்பட 83 சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் ரூ.90 லட்சம் செலவில் கோதையார் லோயர்கேம்ப் முதல் பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் வரையிலான மின்வாரியத்துக்கு சொந்தமான சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளுக்கு ஆய்வகங்கள், கூடுதல் கட்டிடங்கள், கம்ப்யூட்டர் அறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை திட்டத்தில் நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. விஜயதரணி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Solve drinking water problem at Ethavilai.
Ganesan (Vilavancode)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சினை தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தரிசாக காட்சி அளிக்கின்றன. ரப்பருக்கு போதிய விலை கிடைக்காததால் அந்த விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், ரப்பர் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் ரப்பர் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.