தொகுதிகள்: விழுப்புரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
247313
ஆண்
:
121513
பெண்
:
125757
திருநங்கை
:
43

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றிருந்த வி.ஐ.பி. தொகுதிகளின் பட்டியலில் விழுப்புரமும் உள்ளது. விழுப்புரம் தொகுதியானது, விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி, கோலியனூர்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தி.மு.க. ஆட்சியின்போது மூடப்பட்ட விழுப்புரம் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி திறந்துள்ளோம். விழுப்புரம் நகராட்சி பிரசவ விடுதியை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியுள்ளோம். கொள்ளிடம்- விழுப்புரம் (திட்டம்-2) கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 18 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 2 பாடப்பிரிவுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளன. நகராட்சி, கிராமப்புற பள்ளிகளுக்கு மேஜை, பெஞ்சுகள் வழங்க்கப்பட்டுள்ளது. வனத்துறை, பத்திரப்பதிவுத்துறை, கால்நடைத்துறை உள்பட பல்வேறு அலுவலக கட்டிடங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. - சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்காததால் தொழில் பாதிக்கப்படுகிறது. கோலியனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும்.
ராஜா (கோலியனூர்)
விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. மழைக்காலத்தில் தேங்கிய கழிவுநீர் இன்னும் ஒரு சில இடங்களில் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடாக உள்ளது.
அப்துல்கனி (விழுப்புரம்)
Continuous electricity should be provided to the heavy vehicle body building factories located near Koliyanir koot road and bypass road should be constructed at Valavanur Nagar.
Raja (Koliyanur)
வளவனூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டம் கொண்டு வருவதாக கூறினார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
satheesh kumar (கோலியனூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கோலியனூர் கூட்டு சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தை தடுக்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். வளவனூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டம் கொண்டு வருவதாக கூறினார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. கோலியனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நிறைவேறவில்லை.