புதிய தமிழகம்

போட்டியிட்டவை

4

வெற்றிபெற்றவை

0

புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் தலித் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி ஆவார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும்" என்கிறார்.