சமத்துவ மக்கள் கழகம்

போட்டியிட்டவை

0

வெற்றிபெற்றவை

0

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாருக்கும், துணை தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டார். இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியை கைப்பற்றுவேன் என்று கூறி வந்த எர்ணாவூர் நாராயணன் திடீரென்று புதிய கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி, ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி அவர் தொடங்கினார். சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்துடன், ‘நூர்நுனி கூம்பு’ சின்னம் பொறித்த கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.

மன்னிக்கவும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை!!