iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: ஆரணி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1445781 ஆண் 714410
பெண் 731293 திருநங்கை 78
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு; 1. வி.ஏழுமலை - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-386954 2. எம்.கே.விஷ்ணுபிரசாத் - இந்திய தேசிய காங்கிரஸ்-617760- வெற்றி 3. ஜி.செந்தமிழன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-46383 4. கா.சிவபிரகாஷ் - பகுஜன் சமாஜ் கட்சி-5623 5. கா.சக்திவேல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-5291 6. க.சுந்தர் - ஆன்டி கரப்ஷன் டைனமிக் பார்டி-1956 7. அ.தமிழரசி - நாம் தமிழர் கட்சி-32409 8. வ.ஷாஜி- மக்கள் நீதி மய்யம்-14776 9. எஸ்.ஏழுமலை- சுயேச்சை-633 10. ப.கோதண்டபாணி - சுயேச்சை-964 11. க.நா.க.செஞ்சிராஜா - சுயேச்சை-2935 12. மா.பெருமாள் - சுயேச்சை-4907 13. ச.ராமமூர்த்தி - சுயேச்சை-3608 14. சி.ராமமூர்த்தி - சுயேச்சை-1756 15. க.ஏழுமலை - சுயேச்சை-892 16.நோட்டா- 16819 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதிவாக்காளர் பட்டியல் படி ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 14,34,313 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள்-7,09,889. பெண் வாக்காளர்கள்-7,24,352. மூன்றாம்பாலினத்தினர்-72 பேர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- போளூர்................................2,34,004 ஆரணி.................................2,60,571 செய்யாறு..............................2,47,565 வந்தவாசி (தனி).......................2,28,346 செஞ்சி.................................2,51,310 மைலம்.................................2,12,517 ஆரணி நாடாளுமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு 3-வது தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள், கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பட்டு உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை அதிபர்கள் நிறைந்த தொகுதியாகும். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மைலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு 2009-ல் ஆரணி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் 2009-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி 3,96,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் 2,89,898 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 2014-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வக்கீல் செஞ்சி வி.ஏழுமலை 5,02,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் 2,58,877 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி 2,53,332 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 27,717 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் செஞ்சி வெ.ஏழுமலையே மீண்டும் களம் காண்கிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஆரணி, செய்யாறு, போளூர் தொகுதிகள் பெரும்பாலும் நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைப்பதாக வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் பட்டுஜவுளி பூங்கா அமைக்கப்படவில்லை. திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக ஆந்திரா மாநிலம் நகரி செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டம் கனவுத் திட்டமாகவே உள்ளது. தற்போது மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ரூ.1 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரணி மக்களின் நீண்டநாள் கோரிக் கையான அரசு கலைக்கல்லூரி இந்த முறையாவது கொண்டுவருவார்களா என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். செஞ்சி கோட்டையை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் நடைமுறைக்கு வர வில்லை. வந்தவாசி கோரை பாய்கள் ஏற்றுமதிக்கு ஏற்ற ரகமாக இருந்தும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் முயற்சிக்காததால் கோரைபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆரணி பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல்கட்சி தலைவர்கள் சொல்வதோடு நின்றுவிடுகிறார்கள். மைலத்தில் உள்ள தமிழ் புலவர் பயிற்சி கல்லூரியை மேம்படுத்த வேண்டும். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் போக்குவரத்து நெரி சலை சமாளிக்க விரிவான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. போளூர் தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயி களுக்கு உடனுக்குடன் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக உள்ளது. செய்யாறு தொழிற்பேட்டையில் மேலும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை தரக்கூடிய பெரிய நிறுவனங்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற செஞ்சி வி.ஏழுமலை செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்லி என்ற கிராமத்தை தத்தெடுத்ததாக அறிவித்தார். ஆரணி கோட்டை மைதானத்தில் அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி சென்று பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியில் நடைபாதை அமைத்து கொடுத்துள்ளார். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேவையான அளவுக்கு உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்துள்ளார். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:- போளூர் (தி.மு.க. வெற்றி) கே.வி.சேகரன் (தி.மு.க.)...... 66,588 எம்.முருகன் (அ.தி.மு.க.)...... 58,315 சி.ஏழுமலை (சுயேச்சை)........ 38,861 ஏ.வேலாயுதம் (பா.ம.க.)....... 17,184 ஆரணி (அ.தி.மு.க. வெற்றி) சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.).... 94,074 எஸ்.பாபு (தி.மு.க.)........................ 86,747 எஸ்.ராஜசேகர் (பா.ம.க.).................. 12,877 ஆர்.எம்.பாபுமுருகவேல் (தே.மு.தி.க.)..... 7,025 பி.கோபி (பா.ஜ.க.)........................ 1,304 செய்யாறு (அ.தி.மு.க. வெற்றி) தூசி கே.மோகன் (அ.தி.மு.க.)............... 77,766 டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்).... 69,239 ஜி.சீனிவாசன் (பா.ம.க.)...................... 37,491 பி.சரவணன் (தே.மு.தி.க.).................... 10,855 பி.பாஸ்கரன் (பா.ஜ.க.)....................... 2,388 வந்தவாசி (தனி) (தி.மு.க. வெற்றி) எஸ்.அம்பேத்குமார் (தி.மு.க.)....... 80,206 வி.மேகநாதன் (அ.தி.மு.க.)......... 62,138 வடிவேல்ராவணன் (பா.ம.க.)........ 24,277 எம்.கே.மேத்தாரமேஷ் (வி.சி.க.)..... 7,745 செஞ்சி (தி.மு.க. வெற்றி) கே.எஸ்.மஸ்தான் (தி.மு.க.)....... 88,440 எ.கோவிந்தசாமி (அ.தி.மு.க.)..... 66,383 எ.கணேஷ்குமார் (பா.ம.க.)........ 28,515 ஏ.கே.மணி (தே.மு.தி.க.).......... 10,672 மைலம் (தி.மு.க. வெற்றி) ஆர்.மாசிலாமணி (தி.மு.க.)......... 70,880 கே.அண்ணாதுரை (அ.தி.மு.க.)..... 58,574 வி.ஆர்.ராஜேஷ்கரண் (பா.ம.க.)..... 25,711 எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.).......... 10,866 வெற்றி யார் கையில்? ஆரணி நாடாளுமன்ற தொகுதி 2 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் அ.தி.மு.க. ஒருமுறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஆரணி மற்றும் செய்யாறு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. போளூர், வந்தவாசி, செஞ்சி மற்றும் மைலம் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றிருந்தாலும், இந்த தேர்தலில் வெற்றிபெற கடுமையாக போராடவேண்டியநிலை இருக்கும். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் 10,96,044 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 14,34,313 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் (2009) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் அவருடைய மகன் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வக்கீல் செஞ்சி வி.ஏழுமலை வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:- செஞ்சி வி.ஏழுமலை (அ.தி.மு.க.) ............ 5,02,721 ஆர்.சிவானந்தம் (தி.மு.க.).................... 2,58,877 ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) ...................... 2,53,332 எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) ........... 27,717

வேட்பாளர் பட்டியல்

ஏழுமலை.வி

அதிமுக

ஆரணி

செந்தமிழன்.ஜி

அ.ம.மு.க

ஆரணி

விஷ்ணு பிரசாத்.எம்.கே

காங்கிரஸ்

ஆரணி

ஷாஜி

மக்கள் நீதி மய்யம்

ஆரணி

தமிழரசி.அ

நாம் தமிழர்

ஆரணி
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்