iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: மத்திய சென்னை


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1332135 ஆண் 660447
பெண் 671334 திருநங்கை 354
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. தயாநிதி மாறன் - திராவிட முன்னேற்ற கழகம் -448911 (வெற்றி) 2. சாம் பால் - பாட்டாளி மக்கள் கட்சி - 147391 3. தெகலான் பாகவி - இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ) - 23741 4. கமீலா நாசர் - மக்கள் நீதி மய்யம் - 92249 5. டாக்டர் கார்த்திகேயன் - நாம் தமிழர் கட்சி - 30886 6. பார்த்தசாரதி - பகுஜன் சமாஜ் கட்சி - 2684 7.வளர்மதி - அகில இந்திய வள்ளலார் பேரவை - 641 8. நஜிமுன் நிசா - அனைத்து மக்கள் கட்சி - 643 9. சி.எஸ்.கர்ணன் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி -5763 10. டி.சுரேஷ்பாபு - தேசிய மக்கள் சக்தி கட்சி - 690 11. வி.ஆர்.கீதாலட்சுமி - இந்திய பிரமிட் கட்சி - 1028 12. ஜிதேந்திரகுமார் ஜெயின் - இந்திய குடியரசு கட்சி (அ) - 3397 13. சசிக்குமார் - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1555 14. ராஜ் ராம்சந்த் - சுயேச்சை - 496 15. என்.பிரபாகரன் - சுயேச்சை - 377 16. எல்.கோவிந்தராஜ் - சுயேச்சை - 1184 17. ஜி.தினகரன் - சுயேச்சை - 324 18. பி.சாமுவேல் பால் - சுயேச்சை - 1232 19. என்.குணசேகர் - சுயேச்சை - 1227 20. சாம் பால் - சுயேச்சை - 1440 21. எம்.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 196 22. கே.எம்.பிரபாகரன் - சுயேச்சை - 334 23. வி.வி.தமிழரசன் - சுயேச்சை - 510 24. டி.மதன கோபால் - சுயேச்சை - 235 25. கே.நாசர் - சுயேச்சை - 360 26. எம்.ராகவன் - சுயேச்சை 27. கே.குப்புசாமி - சுயேச்சை - 1769 28. ஜெ.எல்.புஷ்பராஜ் - சுயேச்சை - 216 29. எஸ்.சந்திரநாதன் - சுயேச்சை - 929 30. வைத்தியநாதன் - சுயேச்சை - 355 31. வி.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை - 503 32. எவரும் இல்லை - 13768 சென்னையில் வி.ஐ.பி. தொகுதியான மத்திய சென்னை முக்கிய பிரமுகர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். தலைமைச் செயலகம், ஐகோர்ட்டு, மெரினா கடற்கரை, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரி என முக்கிய இடங்கள் அனைத்தும் இந்தத் தொகுதியில் தான் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மத்திய சென்னை தொகுதியில், பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பின்போது, பூங்காநகர், புரசைவாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. அதன்பிறகு, வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இந்த நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மத்திய சென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, தி.மு.க.வே அதிக முறை வென்றுள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் ஜெயித்துள்ளது. 1977–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் பா.ராமச்சந்திரன் வெற்றி வாகை சூடினார். 1980, 1984–ம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் ஏ.கலாநிதியும், 1989, 1991–ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரா.அன்பரசும் வென்றனர். 1996–ம் ஆண்டு முதல் தி.மு.க.வின் கோட்டையாகவே மத்திய சென்னை தொகுதி விளங்கியது. 1996, 1998, 1999–ம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் முரசொலிமாறன் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் முரசொலிமாறனின் மகன் தயாநிதிமாறன் ஜெயித்தார். 2014–ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட எஸ்.ஆர்.விஜயகுமார், தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொகுதி பிரச்சினையை எடுத்துக்கொண்டால், கூவம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு வரும் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்டிரல் – எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையேயான ரெயில் பாதை இணைப்பு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மத்திய சென்னை தொகுதியில் தான் அதிகம் வருகிறது என்றாலும், பயணிகள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை. அதனால், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது. எழும்பூர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. தமிழகத்திலேயே பெரிய ரெயில் நிலையங்களான சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்குவதற்கு போதுமான அளவுக்கு அறைகள் இல்லை. அவர்கள் பயன்படுத்த கழிவறைகளும் அதிகம் இல்லை. மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முன்புறம் வெளியே வரும் பயணிகள் சாலையை கடந்து செல்ல நடை மேம்பால வசதி வேண்டும் என்று நீண்டநாட்களாக கேட்டு வருகிறார்கள். இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. இப்படி, வி.ஐ.பி. தொகுதியாக இருந்தாலும் மத்திய சென்னை தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஏராளம் உள்ளன. வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 13,16,603 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 6,53,358, பெண் வாக்காளர்கள் 6,62,925. மூன்றாம் பாலினத்தினர் 320. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– வில்லிவாக்கம் 2,45,298 எழும்பூர் (தனி) 1,78,780 துறைமுகம் 1,66,515 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி 2,23,661 ஆயிரம்விளக்கு 2,31,851 அண்ணாநகர் 2,70,498 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.விஜயகுமார் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– எஸ்.ஆர்.விஜயகுமார் (அ.தி.மு.க.) 3,33,296 தயாநிதிமாறன் (தி.மு.க.) 2,87,455 ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன் (தே.மு.தி.க.) 1,14,798 சி.டி.மெய்யப்பன் (காங்கிரஸ்) 25,981 ஜெ.பிரபாகர் (ஆம் ஆத்மி) 19,553 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– வில்லிவாக்கம் (தி.மு.க. வெற்றி) ப.ரெங்கநாதன் (தி.மு.க.) 65,972 தாடி ம.ராசு (அ.தி.மு.க.) 56,651 த.பாண்டியன் (தே.மு.தி.க.) 8,234 எம்.ஜெய்சங்கர் (பா.ஜ.க.) 6,438 எழும்பூர் (தனி) (தி.மு.க. வெற்றி) கே.எஸ்.ரவிச்சந்திரன் (தி.மு.க.) 55,060 பரிதிஇளம்வழுதி (அ.தி.மு.க.) 44,381 எம்.வெங்கடேசன் (பா.ஜ.க.) 7,159 த.பிரபு (தே.மு.தி.க.) 6,321 துறைமுகம் (தி.மு.க. வெற்றி) பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) 42,071 கே.எஸ்.சீனிவாசன் (அ.தி.மு.க). 37,235 கிருஷ்ணகுமார் நதானி (பா.ஜ.க.) 13,357 எஸ்.அமீர் அம்சா (எஸ்.டி.பி.ஐ.) – 4,161 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி (தி.மு.க. வெற்றி) ஜெ.அன்பழகன் (தி.மு.க.) – 67,982 ஏ.நூர்ஜகான் (அ.தி.மு.க.) – 53,818 தாமரை கஜேந்திரன் (பா.ஜ.க.) – 6,281 வி.அப்துல்லா சேட் (தே.மு.தி.க.) – 5,507 ஆயிரம்விளக்கு (தி.மு.க. வெற்றி) கு.க.செல்வம் (தி.மு.க.) – 61,725 பா.வளர்மதி (அ.தி.மு.க.) – 52,897 எம்.சிவலிங்கம் (பா.ஜ.க.) – 8,516 ரெட்சன் அம்பிகாபதி (ம.தி.மு.க.) – 7,805 அண்ணாநகர் (தி.மு.க. வெற்றி) எம்.கே.மோகன் (தி.மு.க.) – 72,207 எஸ்.கோகுல இந்திரா (அ.தி.மு.க.) – 70,520 கே.சுரேஷ் (பா.ஜ.க.) – 8,820 மல்லிகா தயாளன் (ம.தி.மு.க.) – 6,491 வெற்றி யார் கையில்? 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்று அசத்தியது. ஆனால், அதே வெற்றியை இந்த முறையும் பதிவு செய்யுமா? என்பது கேள்விக்குறிதான். வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியது இருக்கும். காரணம், 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியுள்ளது. 2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளில் அ.தி.மு.க. 4 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த தே.மு.தி.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. அதன் தாக்கமே 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்ததால், முதல் முறையாக அ.தி.மு.க. வசம் மத்திய சென்னை தொகுதி சென்றது. ஆனால், இந்த முறை 6 சட்டமன்ற தொகுதிகளும் தி.மு.க. வசமே இருப்பதால், அக்கட்சியின் பலமே மேலோங்கி இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு வெற்றிக்கனி என்பது எட்டும் தூரத்தில் இல்லை. அதைப் பறிக்க மிகக் கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய சென்னை தொகுதியில் 36,352 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். சென்னையில் உள்ள மற்ற 2 தொகுதிகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு தான். அ.தி.மு.க. எம்.பி.யின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘தொகுதியில் அவ்வப்போது பார்க்க முடிகிறது. எந்த விழாவுக்கு அழைத்தாலும் வந்து செல்கிறார். பெரியமேட்டில் உள்ள எம்.பி. அலுவலகம் எப்போதும் திறந்திருக்கிறது. ஆனால், கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை என்பது ஆமை வேகத்திலேயே நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிரச்சினைகள் பெரிய அளவில் ஒன்றும் தீர்க்கப்படவில்லை’’ என்றனர்.

வேட்பாளர் பட்டியல்

கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யம்

மத்திய சென்னை

சாம் பால்

பா.ம.க

மத்திய சென்னை

தெஹலான் பாகவி

எஸ்.டி.பி.ஐ

மத்திய சென்னை

டாக்டர்.கார்திக்கேயன்

நாம் தமிழர்

மத்திய சென்னை

கர்ணன்.சி.எஸ்

சுயேட்சை

மத்திய சென்னை

தயாநிதி மாறன்

திமுக

மத்திய சென்னை
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்