iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: வடசென்னை


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1487461 ஆண் 728679
பெண் 758326 திருநங்கை 456
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு; 1. வீ.கலாநிதி - திராவிட முன்னேற்ற கழகம்- 590986 - வெற்றி 2. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் - தேசிய முற்போக்கு திராவிட கழகம்-129468 3. சந்தானகிருஷ்ணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-33277 4. ஏ.ஜி.மவுரியா - மக்கள் நீதி மய்யம்-103167 5. பி.காளியம்மாள் - நாம் தமிழர் கட்சி-60515 6. எஸ்.ராபர்ட் ஞானசேகர் - பகுஜன் சமாஜ் கட்சி-4333 7. எல்.பிரவீன்குமார் - பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா செ-746 8. ஜெ.செபாஸ்டின் - எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்ட்-882 9. எம்.எல்.ரவி - தேசிய மக்கள் சக்தி கட்சி-933 10. க.பிரபாகரன் - மக்களாட்சி கட்சி-667 11. எல்.காமேஷ்வரன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-2620 12. ப.மாரிமுத்து - சுயேச்சை-556 13. வி.சரவணன் - சுயேச்சை-1044 14. என்.சதீஷ்கண்ணன் - சுயேச்சை-828 15. சே.கணேசன் - சுயேச்சை-1432 16. எஸ்.செல்வராஜ் - சுயேச்சை-2413 17. சி.தன்ராஜ் - சுயேச்சை-1092 18. எல்.ராஜ் - சுயேச்சை-518 19. ஜெ.தரணிதரன் - சுயேச்சை-400 20. ஜி.ஸ்ரீநிவாசன் - சுயேச்சை-1642 21. சீ.பிரித்திவிராஜ் - சுயேச்சை-542 22. ஆர்.அருள்முருகன் - சுயேச்சை-603 23. தாமோதரன் - சுயேச்சை-748 24.நோட்டா-15354 வடசென்னை நாடாளுமன்ற தொகுதி 1957–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1971–ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில், 1977–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெற்று வந்தது. பின்னர், 2008–ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), ராயபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 10 முறை தி.மு.க. வெற்றி வடசென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்க்கும்போது, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கி வந்துள்ளது தெரிகிறது. தி.மு.க. 10 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், அ.தி.மு.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளரும் ஒரு முறை கைப்பற்றியுள்ளார். இந்த நாடாளுமன்ற தொகுதியில், 1957–ம் ஆண்டு எஸ்.சி.சி.அந்தோணி பிள்ளை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சீனிவாசன் வெற்றி வாகை சூடினார். 1967, 1971–ம் ஆண்டு தேர்தல்களில் நாஞ்சில் மனோகரனும், 1977–ம் ஆண்டு ஏ.வி.பி.ஆசைத்தம்பியும், 1980–ம் ஆண்டு ஜி.லட்சுமணனும், 1984–ம் ஆண்டு என்.வி.என்.சோமுவும் என தொடர்ந்து 5 முறை தி.மு.க.வினரே ஜெயித்துள்ளனர். அதன்பிறகு, 1989 மற்றும் 1991–ம் ஆண்டு தேர்தல்களில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தா.பாண்டியன் வெற்றி பெற்றார். 1996–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க.வை சேர்ந்த என்.வி.என்.சோமு வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 3 தேர்தல்களில் (1998, 1999, 2004) தி.மு.க. வேட்பாளர் சி.குப்புசாமி வெற்றி வாகை சூடினார். 2009–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) வெற்றி பெற்றார். கடைசியாக 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ் பாபு முதல் முறையாக வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் டி.ஜி.வெங்கடேஷ்பாபு 4,06,704 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கிரிராஜன் (தி.மு.க.) 3,07,000 வாக்குகளும் பெற்றனர். தே.மு.தி.க. சார்பில் களம் இறங்கிய சவுந்தரபாண்டியன் யாரும் எதிர்பாராத வகையில் 86,989 வாக்குகளை பெற்றார். தொடரும் பிரச்சினைகள் வடசென்னை தொகுதியை வஞ்சிக்கப்பட்ட தொகுதி என்றே சொல்லும் அளவுக்கு அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலை தான் இருக்கிறது. எப்படியோ, மெட்ரோ ரெயில் சேவை மட்டும் ஒரு சில பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. வடசென்னை தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி. இங்கு 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் 19.49 சதவீதமும், பழங்குடியினர் 0.2 சதவீதமும் உள்ளனர். இதேபோல், இந்துக்கள் 80 முதல் 85 சதவீதமும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தலா 5 முதல் 10 சதவீதம் அளவுக்கும் வசிக்கின்றனர். புத்த மதம், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினர் 5 சதவீதம் அளவுக்கு உள்ளனர். 87.95 சதவீத மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். வடசென்னை தொகுதி மக்களின் நீண்டகால பிரச்சினை என்று பார்த்தால், கொடுங்கையூர் குப்பைமேடு, குடிநீரில் கழிவுநீர் – கச்சா எண்ணெய் கலப்பது, கொசுத்தொல்லை, செப்பனிடப்படாத சாலைகள், போக்குவரத்து நெரிசல், காற்றுமாசு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லப்படும்போது ஏற்படும் கசிவால், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீருடன் எண்ணெய் கலந்துவருகிறது. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப் படாமல் இருந்து வருகிறது. தற்போது, புதிய குழாய் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளதால், சிக்கல்கள் பல ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வியாசர்பாடி கணேசபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட அனுமதியளித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. துறைமுகம் – எண்ணூர் விரைவுச் சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், திருவொற்றியூர், எண்ணூர், மணலி சாலைகளில் எப்போதும் கனரக வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதை காணமுடிகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மெட்ரோ ரெயில் பணிகளும் வண்ணார் பேட்டை முதல் விம்கோ நகர் வரை நடைபெற்று வருவதால், பல இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்படி, வடசென்னை தொகுதியை எடுத்துக்கொண்டால், குறைகளுக்கு பஞ்சம் இல்லை. வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் 14,68,523 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 7,20,133, பெண் வாக்காளர்கள் 7,47,943. மூன்றாம் பாலினத்தினர் 447. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– திருவொற்றியூர் 2,83,641 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 2,45,466 பெரம்பூர் 2,91,571 கொளத்தூர் 2,64,167 திரு.வி.க.நகர் (தனி) 2,07,845 ராயபுரம் 1,75,833 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ்பாபு வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– டி.ஜி.வெங்கடேஷ்பாபு (அ.தி.மு.க.) 4,06,704 ஆர்.கிரிராஜன் (தி.மு.க.) 3,07,000 எம்.சவுந்தரபாண்டியன் (தே.மு.தி.க.) 86,989 பிஜூ சாக்கோ (காங்கிரஸ்) 24,190 யு.வாசுகி (மா.கம்யூ.) 23,751 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– திருவொற்றியூர் (தி.மு.க. வெற்றி) கே.பி.பி.சாமி (தி.மு.க.) 82,205 பி.பால்ராஜ் (அ.தி.மு.க.) 77,342 ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.) 13,463 எம்.சிவக்குமார் (பா.ஜ.க.) 3,313 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (அ.தி.மு.க. வெற்றி) ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.) 97,218 சிம்லா முத்துசோழன் (தி.மு.க.) 57,673 வசந்திதேவி (விடுதலை சிறுத்தைகள்) 4,195 எம்.என்.ராஜா (பா.ஜ.க.) 2,928 பெரம்பூர் (அ.தி.மு.க. வெற்றி) பி.வெற்றிவேல் (அ.தி.மு.க.) 79,974 என்.ஆர்.தனபாலன் (தி.மு.க.) 79,455 அ.சவுந்தரராஜன் (மா.கம்யூ.) 10,281 இரா.பிரகாஷ் (பா.ஜ.க.) 4,582 கொளத்தூர் (தி.மு.க. வெற்றி) மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) 91,303 ஜெ.சி.டி.பிரபாகர் (அ.தி.மு.க.) 53,573 ப.மதிவாணன் (தே.மு.தி.க.) 6,276 கே.டி.ராகவன் (பா.ஜ.க.) 5,289 திரு.வி.க.நகர் (தனி) (தி.மு.க. வெற்றி) தாயகம் கவி என்ற சிவக்குமார் (தி.மு.க.) 61,744 வ.நீலகண்டன் (அ.தி.மு.க.) 58,422 பி.சுகந்தி (மா.கம்யூ.) 5,702 தே.வனிதாமணி (பா.ம.க.) 2,056 ராயபுரம் (அ.தி.மு.க. வெற்றி) டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) 55,205 ஆர்.மனோகர் (காங்கிரஸ்) 47,174 எச்.சையது ரபி பாஷா (எஸ்.டி.பி.ஐ.) 4,345 எம்.ஆர்.ஜெமிலா (பா.ஜ.க.) 3,562 இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் 2017–ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அதன் விவரம் வருமாறு:– டி.டி.வி.தினகரன் (சுயேச்சை) 89,013 இ.மதுசூதனன் (அ.தி.மு.க.) 48,306 என்.மருதுகணேஷ் (தி.மு.க.) 24,651 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி) 3,802 கரு.நாகராஜன் (பா.ஜ.க.) 1,368 வெற்றி யார் கையில்? தி.மு.க.வின் கோட்டையாக இருந்த வடசென்னை தொகுதியில், கடந்த தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்று அசத்தியது. ஆனால், அந்த வெற்றியை இந்த முறையும் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறிதான். 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருவொற்றியூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேலின் பதவியும் அணி மாறியதால் பறிக்கப்பட்டு அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், அ.தி.மு.க. வின் பலம் ஒரு தொகுதியாக (ராயபுரம்) குறைந்துவிட்டது. எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையே போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 91,188 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, இளம் வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். வடசென்னை தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து பொது மக்களிடம் கேட்டபோது, ‘‘தொகுதி பக்கம் எல்லாம் இதுவரை அவர் வந்ததே இல்லை. எப்போதாவது நடைபெறும் கட்சி விழாக்களில் மட்டும் அவரை பார்க்க முடிகிறது. வாக்கு கேட்டுவந்தபோது அவர் உறுதியளித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றித்தரவில்லை’’ என்றனர்.

வேட்பாளர் பட்டியல்

கலாநிதி வீராசாமி

திமுக

வடசென்னை

காளியம்மாள்.பி

நாம் தமிழர்

வடசென்னை

அழகாபுரம் மோகன் ராஜ்

தேமுதிக

வடசென்னை

மவுரியா.ஏ.ஜி

மக்கள் நீதி மய்யம்

வடசென்னை

சந்தான கிருஷ்ணன்.பி

அ.ம.மு.க

வடசென்னை
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்