iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: தென் சென்னை


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1973315 ஆண் 979480
பெண் 993446 திருநங்கை 389
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. டாக்டர் ஜெ.ஜெயவர்தன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 302649 2. சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் - திராவிட முன்னேற்ற கழகம் - 564872 (வெற்றி) 3. இசக்கி சுப்பையா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 29522 4. ஆர்.குமார் - பகுஜன் சமாஜ் கட்சி - 2185 5. ஆர்.ரங்கராஜன் - மக்கள் நீதி மய்யம் -135465 6. அ.ஜெ.ஷெரின் - நாம் தமிழர் கட்சி - 50222 7. சாய்குமார் - எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு - 1362 8. மா.அ.ஜெயக்குமார் - தேசிய மக்கள் சக்தி கட்சி - 591 9. வி.திருநாவுக்கரசு - மக்களாட்சி கட்சி - 395 10. கே.முரளிகிருஷ்ணன் - இந்திய பிரமிடு கட்சி - 812 11. ஆர்.ஜான்சன் - இந்தியன் கிறிஸ்டியன் பிரண்ட் - 472 12. நரேஷ் - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1251 13. பவர் ஸ்டார் எஸ்.சீனிவாசன் - இந்திய குடியரசு கட்சி (அ) - 613 14. ஜே.ஜான்சி - சுயேச்சை - 352 15. கே.ஜெயராமன் - சுயேச்சை - 869 16. அக்னி ஸ்ரீராமச்சந்திரன் - சுயேச்சை - 1295 17. திருநங்கை ராதா - சுயேச்சை - 950 18. இ.தனசேகரன் - சுயேச்சை - 322 19. குப்பல் ஜி.தேவதாஸ் - சுயேச்சை - 284 20. மு.ராஜேஸ்வரி பிரியா - சுயேச்சை - 719 21. எஸ்.மனோவா - சுயேச்சை - 268 22. சிபி சக்கரவர்த்தி - சுயேச்சை - 599 23. எ.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 387 24. எஸ்.அசோக் - சுயேச்சை - 305 25. தேவசகாயம் - சுயேச்சை - 420 26. சி.ரோசி - சுயேச்சை - 462 27. பி.அழகிரி - சுயேச்சை - 507 28. பி.ராஜி - சுயேச்சை - 200 29. சிதம்பர ஆனந்த ராஜா - சுயேச்சை - 694 30. சரவண பெருமாள் - சுயேச்சை - 1532 31. கார்த்திகேயன் - சுயேச்சை - 499 32. கண்ணன் - சுயேச்சை - 587 33. சுதாகர் - சுயேச்சை - 205 34. து.கார்த்திக் - சுயேச்சை - 1121 35. என்.சுப்ரமணி - சுயேச்சை - 404 36. த.ஹரிஹரன் - சுயேச்சை - 201 37. கோ.தனசேகரன் - சுயேச்சை - 401 38. எஸ்.இளங்குமரன் - சுயேச்சை - 883 39. எம்.மூர்த்தி - சுயேச்சை - 1295 40. ஆர்.கணேசன் - சுயேச்சை - 604 41. எவரும் இல்லை - 15836 சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி தென்சென்னை. பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருமை இந்த தொகுதிக்கு உண்டு. உயர்தட்டு மக்கள், படித்தவர்கள், வெளிமாநில வாக்காளர்கள் மிகுதியாக இருக்கும் தொகுதி இது. தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தியாகராயநகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009–ம் ஆண்டு முதல் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க. 8 முறை வெற்றி 1957–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 15 நாடாளுமன்ற தேர்தல்களை தென்சென்னை தொகுதி சந்தித்துள்ளது. இந்தத் தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, தி.மு.க. 8 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தென்சென்னை தொகுதியில் 1957–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் முதல் வெற்றியை பதிவு செய்தார். 1962–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.மனோகரன் வெற்றி பெற்றார். 1967–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாதுரை வெற்றி வாகை சூடினார். அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.குருமூர்த்தியை தோற்கடித்து, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். 1967–ம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் மற்றும் 1971–ம் ஆண்டு பொதுத்தேர்தலில் முரசொலிமாறன் வெற்றி பெற்றார். ஆனால், 1977–ம் ஆண்டு தேர்தலில் முரசொலிமாறன் தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வெங்கட்ராமன் ஜெயித்தார். 1980–ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வெங்கட்ராமன், தொடர்ந்து 2–வது முறையாக வெற்றியை பதிவு செய்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத் 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 1984–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நடிகை வைஜெயந்தி மாலா வெற்றி வாகை சூடினார். 1989–ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலிலும் வைஜெயந்தி மாலா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ஆலடி அருணா தோற்றுப்போனார். 1991–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதரன், தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை தோற்கடித்தார். அதன்பிறகு, 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து 4 முறை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு 2009–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. முற்றுப்புள்ளி வைத்தது. அ.தி.மு.க. சார்பில் களம்கண்ட சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை தோற்கடித்தார். 2014–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜெ.ஜெயவர்தன் 1,35,575 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தார். தீர்க்கப்படாத பிரச்சினை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஏராளம் உள்ளன. அடையாறு, கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த மக்களுக்கு சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த குடியிருப்புகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி என்று எதுவும் அப்பகுதியில் இல்லை. தென்சென்னை தொகுதியில் பல இடங்களில் இயக்கப்பட்ட மினி பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பெருங்குடி குப்பைமேடு சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக இருந்து கொண்டிருக்கிறது. பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பட்டினப்பாக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள் இன்னும் கட்டிக் கொடுக்கப்படவில்லை. தென்சென்னை தொகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சி என்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பல நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மேடவாக்கம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் சாலை, ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை. வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த தியாகராயநகர் பகுதியில், வாகனங்கள் நிறுத்தகங்கள், கழிப்பிடங்கள் அதிகம் இல்லாத நிலை இருக்கிறது. அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தகம் கட்டப்படும் என்று அறிவித்து, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தியாகராயநகர் பஸ் நிலையம் இரண்டடுக்காக அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கிடப்பில் உள்ளது. ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்ற பெருமைக்குரிய கோயம்பேடு மார்க்கெட்டில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்பது வியாபாரிகளின் நீண்டநாள் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த தென்சென்னை தொகுதியின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 19,36,209 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 9,61,904, பெண் வாக்காளர்கள் 9,73,934. 3–ம் பாலினத்தினர் 371. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– விருகம்பாக்கம் 2,69,995 சைதாப்பேட்டை 2,66,150 தியாகராயநகர் 2,28,762 மயிலாப்பூர் 2,55,655 வேளச்சேரி 2,96,952 சோழிங்கநல்லூர் 6,18,695 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயவர்தன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அ.தி.மு.க.) 4,34,540 டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) 2,98,965 இல.கணேசன் (பா.ஜ.க.) 2,58,262 எஸ்.வி.ரமணி (காங்கிரஸ் 24,276 ஜாகீர் உசேன் (ஆம் ஆத்மி) 17,208 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– விருகம்பாக்கம் (அ.தி.மு.க. வெற்றி) விருகை வி.என்.ரவி (அ.தி.மு.க.) 65,979 க.தனசேகரன் (தி.மு.க.) 63,646 டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.) 19,167 ப.பார்த்தசாரதி (தே.மு.தி.க.) 9,730 சைதாப்பேட்டை (தி.மு.க. வெற்றி) மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) 79,279 சி.பொன்னையன் (அ.தி.மு.க.) 63,024 வி.காளிதாஸ் (பா.ஜ.க.) 6,000 இரா.சகாதேவன் (பா.ம.க.) 5,913 தியாகராயநகர் (அ.தி.மு.க. வெற்றி) பி.சத்தியநாராயணன் என்ற தி.நகர் சத்யா (அ.தி.மு.க.) 53,207 டாக்டர் எஸ்.என்.கனிமொழி (தி.மு.க.) 50,052 எச்.ராஜா (பா.ஜ.க.) 19,888 வி.குமார் (தே.மு.தி.க.) 6,210 மயிலாப்பூர் (அ.தி.மு.க. வெற்றி) ஆர்.நட்ராஜ் (அ.தி.மு.க.) 68,176 கராத்தே ஆர்.தியாகராஜன் (காங்கிரஸ்) 53,448 கரு.நாகராஜன் (பா.ஜ.க.) 11,720 என்.சுரேஷ்குமார் (பா.ம.க.) 5,806 வேளச்சேரி (தி.மு.க. வெற்றி) வாகை சந்திரசேகர் (தி.மு.க.) 69,747 நீலாங்கரை எம்.சி.முனுசாமி (அ.தி.மு.க.) 61,123 டால்பின் ஸ்ரீதரன் (பா.ஜ.க.) 14,447 வி.என்.ராஜன் (தே.மு.தி.க.) 9,635 சோழிங்கநல்லூர் (தி.மு.க. வெற்றி) எஸ்.அரவிந்த் ரமேஷ் (தி.மு.க.) 1,47,014 லியோ என்.சுந்தரம் (அ.தி.மு.க.) 1,32,101 கே.ராம்குமார் (பா.ம.க.) 15,595 உஜகர் சிங் (பா.ஜ.க.) 15,129 வெற்றி யார் கையில்? தென்சென்னை தொகுதியில் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ள அ.தி.மு.க., இந்த முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனையை நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளும். 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தென்சென்னை தொகுதியில் உள்ள விருகம்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய 3 தொகுதிகளை அ.தி.மு.க.வும், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளன. எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.– தி.மு.க. இடையே போட்டி பலமாக இருக்கும். 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, தென்சென்னை தொகுதியில் மொத்தம் 17,14,987 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 2,21,222 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, புதிய வாக்காளர்களின் ஓட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில் துருப்பு சீட்டாக இருக்கும். தென்சென்னை தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து மக்களிடம் கேட்டபோது, ‘‘தொகுதி பக்கம் எப்போதாவது அவரை பார்க்க முடியும். வீட்டிலேயே அலுவலகம் வைத்திருக்கிறார். அவரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பல கொடுத்திருக்கிறோம். ஆனால், கோரிக்கைகள் தான் நிறைவேறிய பாடில்லை’’ என்றனர்.

வேட்பாளர் பட்டியல்

ரங்கராஜன்

மக்கள் நீதி மய்யம்

தென் சென்னை

இசக்கி சுப்பையா

அ.ம.மு.க

தென் சென்னை

தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக

தென் சென்னை

டாக்டர்.ஜெ.ஜெயவர்த்தன்

அதிமுக

தென் சென்னை

ஷெரின்.அ.ஜெ

நாம் தமிழர்

தென் சென்னை
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்