iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்
  • முகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்
  • மதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்
  • |
  • முகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்
  • |
  • மதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
  • |
  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • |

தொகுதி: தர்மபுரி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1484027 ஆண் 755323
பெண் 728574 திருநங்கை 130
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. டாக்டர் அன்புமணி ராமதாஸ் - பாட்டாளி மக்கள் கட்சி - 504235 2. செந்தில்குமார் - திராவிட முன்னேற்ற கழகம் - 574988 3. பி.பழனியப்பன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 53655 4. டி.ராஜசேகர் - மக்கள் நீதி மய்யம் - 15614 5. ஆர்.ருக்மணிதேவி - நாம் தமிழர் கட்சி - 19674 6. சி.சிவானந்தம் - பகுஜன் சமாஜ் கட்சி - 6012 7. கே.அண்ணாதுரை - இந்திய கணசங்கம் கட்சி - 9017 8. பொ.அறிவழகன் - சுயேச்சை - 1482 9 ச.இளங்கோ - சுயேச்சை - 10830 10 வே.சக்திவேல் - சுயேச்சை - 1503 11. சி.சரவணன் - சுயேச்சை - 1062 12. சி.துரை - சுயேச்சை - 1293 13. கே.பத்மராஜன் - சுயேச்சை - 2862 14. சி.மணிவாசகம் - சுயேச்சை - 4427 15. சி.வெங்கடாசலம் - சுயேச்சை - 3172 16. எவரும் இல்லை - 13379 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 67 ஆயிரத்து 904 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 47 ஆயிரத்து 625, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 20 ஆயிரத்து 159, மூன்றாம் பாலினத்தினர் 120. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு: பாலக்கோடு...................................2,23,980 பென்னாகரம்.................................2,34,646 தர்மபுரி..........................................2,53,884 பாப்பிரெட்டிபட்டி............................2,50,878 அரூர்(தனி).....................................2,33,018 மேட்டூர்...........................................2,71,498 தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நீர்பாசன வசதி அளிக்கும் மேட்டூர் அணை ஆகியவை இந்த நாடாளுமன்ற தொகுதியில்தான் அமைந்துள்ளன. இந்த தொகுதியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 11 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இந்த தேர்தல்களில் பா.ம.க. அதிகபட்சமாக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. இந்த தொகுதியில் 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த அர்ச்சுனனும், 1984&ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரையும், 1989&ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.சேகரும் வெற்றி வாகை சூடினர். 1991-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி.தங்கபாலுவும். 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீர்த்தராமனும், 1998-ம் ஆண்டு பா.ம.க.வை சேர்ந்த பாரிமோகனும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட பு.தா.இளங்கோவன் வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் செந்தில் வெற்றி வாகை சூடினார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தாமரைச்செல்வன் வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை 77,146 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், 2 தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 2 தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன. இந்த சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் களம் காணுகிறார். தி.மு.க. சார்பில் டாக்டர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். தீர்க்கப்படாத பிரச்சினைகள் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர் அதிகமாக உள்ளனர். மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், கொங்கு வேளாளர், முதலியார், செட்டியார் உள்ளிட்ட பிற சமூகத்தினரும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர். விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட தர்மபுரியில் பருவமழையை நம்பி மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. மழை பொய்த்தால் இந்த பகுதியில் விவசாயம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் படித்த இளைஞர்களில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை தொடர்கிறது. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் பரவலாக காணப்பட்ட இளம்வயது திருமணம், பெண் சிசுக்கொலை, நக்சல் தாக்கம் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்கு போதிய வேலைவாய்ப்பின்மையே முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி அருகே நெக்குந்தி பகுதியில் மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ராக்கெட் தளவாட தளம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தென்பெண்ணையாற்று உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம், காவிரி ஆற்றின் உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டம் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பவை இந்த நாடாளுமன்ற தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக தொடர்கின்றன. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் விவரம் வருமாறு:- தர்மபுரி (தி.மு.க. வெற்றி) தடங்கம் சுப்ரமணி (தி.மு.க.)..............71,056 பு.தா.இளங்கோவன் (அ.தி.மு.க.).............61,380 டாக்டர்.செந்தில் (பா.ம.க.)..................56,727 இளங்கோவன் (தே.மு.தி.க.)....................9,348 பென்னாகரம் (தி.மு.க. வெற்றி) பி.என்.பி.இன்பசேகரன் (தி.மு.க.).......................76,848 டாக்டர்.அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.)...............58,402 கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.)....................51,687 நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்டு)..........................5,624 பாலக்கோடு (அ.தி.மு.க. வெற்றி) கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.)..................76,143 பி.கே.முருகன் (தி.மு.க.).......................70,160 மன்னன் (பா.ம.க.)..............................31,612 காவேரிவர்மன் (தே.மு.தி.க.).....................4,915 அரூர் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) ஆர்.ஆர்.முருகன் (அ.தி.மு.க.)..................64,568 ராஜேந்திரன் (தி.மு.க.)..........................53,147 கோவிந்தசாமி (விடுதலை சிறுத்தைகள்)............33,632 முரளி (பா.ம.க.).................................27,747 பாப்பிரெட்டிப்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) பி.பழனியப்பன் (அ.தி.மு.க.).....................74,234 சத்தியமூர்த்தி (பா.ம.க.).........................61,521 பிரபு ராஜசேகர் (தி.மு.க.)........................56,109 பாஸ்கர் (தே.மு.தி.க.)...........................9,441 மேட்டூர் (அ.தி.மு.க. வெற்றி) செம்மலை (அ.தி.மு.க.)..........................72,751 எஸ்.ஆர்.பார்த்திபன்(தி.மு.க.).....................66,469 ஜி.கே.மணி(பா.ம.க.).............................49,939 பூபதி(தே.மு.தி.க.)................................5,892 வெற்றி யார் கையில்? கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். இந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது 2 தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், 2 தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இந்த தொகுதியில் வாக்கு வங்கி உள்ளது. இதேபோல் தி.மு.க. தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியும் களமிறங்குகிறது. இந்த கூட்டணியும் வலுவானதாக கருதப்படுகிறது. இந்த கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதேபோல் அ.ம.மு.க.வும், மக்கள் நீதிமய்யமும் வேட்பாளரை களமிறக்க உள்ளன. இதனால் இந்த தொகுதியில் 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 870 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி&மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த திட்டத்தை எந்தவித தொய்வுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு ஆஸ்பத்திரிகள், பஸ்நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம், புதிய பஸ்நிலையங்கள் அமைத்தல், மலைவாழ் பகுதி மக்களுக்கு சமுதாய கூடங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றி இருப்பது, நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த தொடர் போராட்டங்கள் நடத்தியது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தொழில்வளர்ச்சி இன்மை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என இந்த தொகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன என்று தெரிவித்தனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:& டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க)...........4,68,194 பி.எஸ்.மோகன் (அ.தி.மு.க.)...................3,91,048 தாமரைச்செல்வன் (தி.மு.க.).....................1,80,297 ராமசுகந்தன் (காங்கிரஸ்)..........................15,455 ரஜினிகாந்த் (பகுஜன்சமாஜ்).........................8,180

வேட்பாளர் பட்டியல்

ராஜசேகர்.டி

மக்கள் நீதி மய்யம்

தர்மபுரி

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க

தர்மபுரி

செந்தில்குமார்.எஸ்

திமுக

தர்மபுரி

பழனியப்பன்.பி

அ.ம.மு.க

தர்மபுரி

ருக்ம்ணிதேவி.ர

நாம் தமிழர்

தர்மபுரி
தேர்தல் செய்திகள்

எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்

அதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு

தேர்தல் முடிவுகள்